தொடக்கமே களேபரம்.. அனைத்து கட்சி கூட்டத்தில் ‘இந்தியா' கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று டெல்லியில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அ்மைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த 20 எம்பிக்களுக்கு தனி கட்சி அங்கீகாரத்துடன் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான், இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (யுபிடி) உள்பட பிற எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி பங்கேற்றார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அழைப்பின்பேரில் இந்த கூட்டம் நடந்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்பட பல மத்திய அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை அமைதியாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு கோரும் வகையில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த கூட்டம் தொடங்கியதுமே களேபரமானது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதாவது சமீபத்தில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த லோக்சபா எம்பிக்கள் 20 பேர் தனி அணியாக செயல்பட தொடங்கினர். இவர்கள் தேசியவாத குடியுரிமைக் கட்சியுடன் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதாவது சமீபத்தில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சியை சேர்ந்த லோக்சபா எம்பிக்கள் 20 பேர் தனி அணியாக செயல்பட தொடங்கினர். இவர்கள் தேசியவாத குடியுரிமைக் கட்சியுடன் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் தனி அணியாக செயல்பட சபாநாயகர் ஓம்பிர்லா ஒப்புதல் வழங்கினாலும் கூட தனி கட்சியாக இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. அதோடு லோக்சபாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் எம்பிக்களில் இவர்கள் 3ல் 2 பங்கை கடந்ததால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் மம்தா பானர்ஜி உள்ளார்.
இந்நிலையில் தான் 20 எம்பிக்களை தனி கட்சியாக செயல்பட அங்கீகாரம் அளித்தது போல் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கெடுத்தனர்.
இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பியான மஹுவா மொய்த்ரா கூறுகையில், '' 'இந்தியா' கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளோம். காஙகிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம்ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, இடதுசாரிகள் மற்றும் சிவசேனா யுபிடி கட்சிகளை சேர்ந்தோர் வெளிநடப்பு செய்தோம். திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்து தேசியவாத குடியுரிமை கட்சி என்று செயல்படுவோரை இன்னும் தனி கட்சியாக அங்கீகரிக்கவில்லை.
இவர்கள் அந்த கட்சியில் சேர்ந்ததை இன்னும் சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை. அவர்களை தகுதி நீக்க கோரும் மனு நிலுவையில் உள்ளது. இதனால் அவர்களுக்கு தனியாக செயல்பட முடியாது. அப்படி இருக்கும்போது அனைத்து கட்சி கூட்டத்துக்கு எப்படி அழைக்கப்படலாம். அவர்கள் எப்படி இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் வெளிநடப்பு செய்தோம்'' என்றார்.


Click it and Unblock the Notifications
