பாஜகவுக்கு தீனி போடுவதே 'இந்தியா' கூட்டணி வேலை.. அய்யோ பாவம்! திமுக, காங்கிரஸை தொடர்ந்து நிதிஷ்!
டெல்லி: லோக்சபா தேர்தல் பிரசாரத்தை பாஜகவுக்கு ரொம்பவே எளிதாக்கிக் கொடுத்து வருகிறது "இந்தியா" கூட்டணி கட்சிகள். "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் நித்தம் ஒரு சர்ச்சையை கிளப்பி பாஜக வெளுத்தெடுக்க தீனி போட்டுக் கொண்டே இருப்பதுதான் பரிதாபத்துக்குரியது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது. ஆனாலும் கடந்த காலங்களைப் போல பெரும் எண்ணிக்கையிலான தொகுதிகள் கிடைக்குமா? என்கிற சந்தேகமும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உண்டு.

'இந்தியா' கூட்டணி: பாஜகவின் சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் திடீரென "இந்தியா" கூட்டணி என அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர கொஞ்சம் ஆடித்தான் போனது அந்த கூட்டணி. இந்தியா கூட்டணிக்கு போட்டியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தை அவசர கதியில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டிய போதே இந்த தயக்கமும் பேரச்சமும் வெளிப்படையாகவே தெரிந்தது. இந்தியா கூட்டணி ஒவ்வொரு மாநிலமாக போய் கூட்டங்களை கூட்டி ஆலோசனைகள் நடத்தி ஜரூராக லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாரானது பாஜகவை ரொம்பவே ஆடவைத்தது. லோக்சபா தேர்தலில் எதை சொல்லி பிரசாரம் செய்வது? லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளை புதிது புதிதாக எப்படி விமர்சிப்பது என திக்கு தெரியாமல் திணறிக் கொண்டிருந்தது பாஜக.
உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம பேச்சு: அப்போதுதான் திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்ம ஒழிப்பு குறித்து முழங்கினார். இதனை பாஜக கெட்டியாகப் பிடித்து கொண்டது. சனாதனிகளை இனப்படுகொலை செய்ய சொல்கிறார் என திட்டமிட்ட அவதூறை பரப்பி பாஜக கூட்டணி லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கனஜோராக தொடங்கியது. பிரதமர் மோடி முதல் அத்தனை பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் இன்றளவும் உதயநிதியின் சனாதன தர்ம ஒழிப்பு பேச்சை வட இந்திய தேர்தல் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். பாஜகவின் இந்த அதிரி புதிரி ஆட்டம் கண்டு 'இந்தியா' கூட்டணி தலைவர்களே உதயநிதியை கண்டிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பின்னர் சனாதன தர்மம் பேச்சு சற்று ஓய்ந்திருந்தது.
சத்தீஸ்கர் மகாதேவ் ஆப் மோசடி: இதனிடையே 5 மாநில சட்டசபை தேர்தல் வந்துவிட்டது. "இந்தியா" கூட்டணி இருக்கிற திசையே தெரியாத அளவுக்கு 5 மாநில தேர்தல்களில் மூழ்கிவிட்டது. இந்த 5 மாநில தேர்தல்களிலும் கூட உள்ளூர் பிரச்சனைகளை முன்வைக்காமல் லோக்சபா தேர்தலுக்கான ஒத்திகை போல மோடியின் செயல் திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு சேகரித்தது பாஜக. இந்த பிரசாரத்துக்கு அவல் சாப்பிட்டது போல கிடைத்தது சத்தீஸ்கர் மகாதேவ் ஆப் மோசடி. சத்தீஸ்கர் முதல்வரான மூத்த காங்கிரஸ் தலைவர் மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் ரூ508 கோடி நிதி உதவி பெற்றார் என அமலாக்கத்துறை தரப்பில் ஒரு தகவல் பரப்பிவிட 'இந்தியா கூட்டணி' கட்சிகளே ஊழல் கட்சிகள் என்கிற இன்னொரு ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டது பாஜக. கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் இதனை முன்வைத்தே பிரசாரம் செய்கின்றனர்.

அடுத்தடுத்து நிதிஷ் கமெண்ட்: இந்த வரிசையில் 'இந்தியா' கூட்டணியின் இருப்பு குறித்து சில நாட்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பினார். பின்னர் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் கூட காங்கிரஸை விமர்சித்தார். இதனால் 'இந்தியா' கூட்டணியை இலகுவாகவே விமர்சிக்க தொடங்கியது பாஜக. அத்துடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான விவாதத்தில் பெண்கள் குறித்து மிக மோசமான கருத்துகளை நிதிஷ்குமார், பீகார் சட்டசபையிலேயே பேசியது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துவிட்டது. பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்த பெருமிதத்துடன் இருக்கும் பாஜக கூட்டணிக்கு 'தீபாவளி' போனஸ் போல நிதிஷ்குமார் அல்வாவை வாரி கொடுத்திருக்கிறார். சும்மாவே சலங்கை கட்டி ஆடும் பாஜக.. செரிமானமாகக் கூடிய அல்வாவை வைத்து அல்லோகலப்படுத்திவிடாதா? லோக்சபா தேர்தலில் பாஜக சும்மா இருந்தாலே போதும் போல... இந்தியா கூட்டணி கட்சிகளே இதோ.. இதோ.. வாய் மெல்ல அவலை வாரி வாரி வழங்கி கொண்டே இருப்பார்கள் போல!
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications