ஹைவேயில் போர் விமானத்தை தரையிறக்கலாம்.. இந்தியா செய்த தரமான சம்பவம்! சீனாவுக்கு செக்
டெல்லி: வடகிழக்கு மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் இயங்கும் வசதி கொண்ட நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சீனாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த சாலையில் அவசர காலங்களில் போர் விமானங்களை தரையிறக்க முடியும். இந்த சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்தியாவின் முதல் அவசரகால விமான இறங்குதளம் அஸ்ஸாமில் இன்று திறக்கப்பட்டுள்ளது. திப்ருகர் மாவட்டத்தில், மோரன் புறவழிச்சாலையில் இது அமையப்பெற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 2-ல் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

4.2 கிமீ நீளம் கொண்டது
இந்த இறங்குதளம் 4.2 கிலோமீட்டர் நீளம் கொண்டது. தேசிய அவசர காலங்களில் இது பயன்படும். மனிதாபிமானப் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கை பேரிடர்கள் போன்ற காலங்களில் அவசர தேவைகளுக்கு இதை பயன்படுத்தும். அது மட்டும் இன்றி, ராணுவ விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களும் இதை பயன்படுத்தலாம். இது மாற்று ஓடுபாதையாகச் செயல்படும்.
பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ள இந்த சாலை, "சீனாவின் எல்லையில் இருந்து 300 கி.மீ., மியான்மரில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் உள்ளன. பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இதன்மூலம் நாட்டின் பாதுகாப்புத் திறன் வலுவடையும். இப்பகுதிக்கு இது கூடுதல் பாதுகாப்பு திறனை வழங்கும்.
மோடி திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி இன்று அசாம் சென்றார். திப்ருகார் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் சாபுவா விமானப்படை தளத்திற்குச் சென்றார். பின்பு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மோரன் தளத்திற்கு சென்றார். இதையடுத்து, இந்திய விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டார். பின்னர் போர் விமானத்தில் வந்த மோடி, அந்த தேசிய நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். மோடி பயணித்த அந்த விமானம் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் தரையிறங்கியது.
போர் விமானங்களை சாலையில் இறக்கும் சோதனை ஓட்டம் புதன்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றன. உள்ளூர் மக்கள் பெருமளவில் திரண்டு இந்த சோதனை ஓட்டத்தை பார்த்தனர். கடந்த 2021 நவம்பரில் பிரதமர் மோடி ஒரு இதே போன்ற ஒரு சாலையை திறந்து வைத்தார். உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் அந்த அவசரகால தளம் உள்ளது.
சீனாவுக்கு இந்தியா வைக்கும் செக்
இந்த புதிய விமான இறங்குதளம் நாட்டின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும். அவசர காலச் சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவும். இது இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியமானது. பாதுகாப்புத் திட்டங்களில் மிக முக்கிய படிநிலையாகும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய சீனா, எல்லையில் அவ்வப்போது இந்தியாவுடன் வாலாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அருணாசலபிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என உரிமை கொண்டாடும் சீனா, அடாவடியாக எல்லையில் கட்டுமானங்களை அதிகரித்து வருகிறது.
எளிதில் தடவாளங்களை எடுத்துச் செல்ல
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக எல்லையோரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, குடியிருப்புகளை உருவாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கு தக்க பதிலடிகொடுக்கும் விதமாக இந்தியாவின் இந்தநெடுஞ்சலை அமைய உள்ளது.
போர் பதற்றம் மற்றும் அவசர காலங்களில் எளிதில் தடவாளங்களை எடுத்து செல்லவும் நிவாரண பொருட்களை கொண்டு செல்லம் முடியும். அதேபோல, மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியிலும் இந்த சாலை வருவதால் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த நெடுஞ்சாலை இருக்கும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications