லடாக்கில் சிந்து நதியின் குறுக்கே 10 அடி உயர தடுப்பணை.. பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில், அந்த நதியின் குறுக்கே லடாக்கில் தடுப்பணை ஒன்றை அமைத்துள்ளது. வறட்சியான கால கட்டங்களில் லடாக் பகுதி விவசாயிகள் இந்த நீரை பயன்படுத்த முடியும் என்பதால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் நடவடிக்கை கிலியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு தக்க பாடும் புகட்டும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானின் பெரும்பகுதி விவசாயம் சிந்து நதி நீரையே நம்பியிருப்பதால், இந்தியாவின் இந்த முடிவு பாகிஸ்தானை கதி கலங்க வைத்துள்ளது.

India built first rock check dam across the Indus river at Upshi in Leh - pakistan upset

பாகிஸ்தானுக்கு பேரிடி

இந்தியாவின் முடிவை எப்பாடு பட்டாவது திரும்ப பெற வைத்துவிட வேண்டும் என்று பல்வேறு வழிகளிலும் முயன்று மூக்கு உடைபட்டு வருகிறது பாகிஸ்தான். இந்த நிலையில்தான், பாகிஸ்தானுக்கு பேரிடி கொடுக்கும் விதமாக இந்தியா புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. லடாக்கின் வறட்சியை போக்கி விவசாய மக்களுக்கு பலனளிக்கும் வகையில், சிந்து நதி நீரை பயன்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

இதற்காக, சிந்து நதியின் குறுக்கே இந்தியா தடுப்பணையை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. லே வில் உள்ள உப்ஷி பகுதியில் இந்த தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. சிமெண்ட் எதுவும் பயன்படுத்தாமல் முழுக்க கற்களால் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை அமைக்கப்படுவதன் மூலம் நதியின் நீர் மட்டம் 10 அடி உயர வாய்ப்பு உள்ளது. சிந்து நதி ஆழமான பள்ளத்தாக்குகளுக்கு இடையே மிகவும் தாழ்வான பகுதிகளில் ஓடுவதால், இந்த நதியின் நீரை பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் விவசாயிகளுக்கு உள்ளன.

40 மில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம்

நதியில் இருந்து நீரை பம்ப் செய்து எடுத்து கோடை காலத்தில் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது தடுப்பணையின் மூலம் நதியின் நீர் மட்டம் உயர்ந்தால் இதனை எளிதாக விவாசயிகள் பயன்படுத்த முடியும். புதிய அணை மூலம் 40 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். அதோடு, வறட்சியான கிராமங்களுக்கு இகு பே நீர்ப்பாசன கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடியும்.

உள்ளூர் மக்களுக்கு பயன் அளிப்பதோடு, பாகிஸ்தானுக்கும் ஒரு வலுவான செய்தியை இந்த அணை கொண்டு செல்லும் என்பதால் இந்தியாவின் இந்த புதிய திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், அந்த நதியில் பல்வேறு உள்கட்டமைப்புகளை இந்தியா தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நீர் மின் நிலையம் ஒன்றையும் அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

7 தடுப்பணைகள் அமைக்கும் திட்டம்

லடாக்கில் செயல்படுத்தப்பட உள்ள நீர் திட்டங்கள் குறித்த முன்மொழிவுகளை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திடம் லடாக் யூனியன் பிரதேசம் ஒப்படைத்துள்ளது. அதில் ஏழு தடுப்பணைகள் அமைக்கும் திட்டமும் உள்ளது. பாகிஸ்தானின் 80 சதவீதம் விவசாயம் சிந்து நதியை நம்பியே உள்ளது. இதனால், அந்த ஆற்றில் நீரோட்டம் தடைபட்டால், பாகிஸ்தான் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பதால், இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பாகிஸ்தனுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

இமயமலைத்தொடரில் திபெத் அருகே உள்ள மான்சரோவர் பகுதியில் உற்பத்தியாகும் சிந்து நதி, இந்தியாவின் லடாக் வழியாக பாய்ந்து பாகிஸ்தான் வழியாக கராச்சி அருகே அரபிக்கடலில் கலக்கிறது. 3,610 கிலோ மீட்டர் இந்த நதி ஓடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+