“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவை இந்தியா 100% நம்பலாம் என்றும், நான் பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய ரசிகன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

இது அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக இதனை சீன உற்று நோக்கி வருகிறது.

India

டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த 250வது அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டத்தில், டிரம்ப் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக உரையாற்றினார். இந்தியாவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் மனதாரப் பாராட்டினார்.

மேலும், இந்தியாவுடனான தனது தனிப்பட்ட மற்றும் இருதரப்பு உறவுகளைப் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார். "இந்தியாவும், எனது மிகச் சிறந்த நண்பரான பிரதமர் நரேந்திர மோடியும் என்னை எப்போதும் 100 சதவீதம் முழுமையாக நம்பலாம். எங்களது நட்பு மிகவும் உறுதியானது" என்று வெள்ளை மாளிகை வட்டாரங்களில் அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தகப் போர் மற்றும் வரிவிதிப்பு விவாதங்கள்

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையே இறக்குமதி வரிகள் தொடர்பாக சில சுணக்கங்கள் நிலவி வந்தன. இந்தியா தனது சந்தையில் அதிக வரி விதிப்பதாகக் கூறி அமெரிக்கா சில கடுமையான வரிகளை விதித்திருந்தது. இதனால் பிரதமர் மோடி தன் மீது அதிருப்தியில் இருப்பதாக ட்ரம்பே முன்பு குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அண்மையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையே நடைபெற்ற நேரடித் தொலைபேசி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது 'பரஸ்பர வரிவிதிப்பை' 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்தது. இந்தச் சூழலில் வந்துள்ள ட்ரம்பின் தற்போதைய அறிக்கை, இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் என்பதைக் காட்டுகிறது.

பிரதமர் மோடியை மிகவும் புத்திசாலியான மனிதர் மற்றும் சிறந்த தலைவர் என்று மீண்டும் ஒருமுறை புகழ்ந்துள்ள ட்ரம்ப், தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட புரிதல் காரணமாகவே இரு நாடுகளுக்கும் இடையேயான பெரிய வர்த்தகச் சிக்கல்கள்கூட மிக எளிதாகத் தீர்க்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+