டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை நோக்கி ஆவேசமாக வந்த சீன ராணுவத்தினர்!

Google Oneindia Tamil News

டெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள ரெசாங்-லா மலைப்பாதையின் முக்பாரி பகுதியில் சீனப் படைகள் இரும்பு ராடுகள், ஈட்டிகள், கிளப்புகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை எடுத்துச் வந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Recommended Video

    China சொன்ன பொய்யை நிரூபிக்கும் புகைப்படங்கள் | Oneindia Tamil

    உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் (எல்.ஐ.சி) பதற்றம் அதிகரித்த நிலையில், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) சுமார் 50-60 வீரர்கள் மாலை 6 மணியளவில் பாங்காங் ஏரி பகுதியில் தெற்கு கரையில் உள்ள இந்திய முகாமை அணுகினர்.

    ஆனால் இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். அங்கு சீன வீரர்களை இந்திய வீரர்கள் வலுவாக எதிர்கொண்டனர் . அவர்களை பின்வாங்க வைக்க இந்தியா கட்டாயப்படுத்தியது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    அருணாச்சலில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள்.. சீன ராணுவத்திடம் இருந்து வந்த நல்ல செய்தி! அருணாச்சலில் காணாமல் போன ஐந்து இந்தியர்கள்.. சீன ராணுவத்திடம் இருந்து வந்த நல்ல செய்தி!

    இரும்பு கம்பி, ஈட்டிகள்

    இரும்பு கம்பி, ஈட்டிகள்

    ஜூன் 15 ம் தேதி கிழக்கு லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களின் போது சீன துருப்புக்கள் இந்திய வீரர்கள் மீது கற்கள், ஆணி பதித்த கட்டைகள், இரும்பு கம்பிகள் மற்றும் கிளப்புகள் மூலம் கொடூரமான தாக்குதலை நடத்தியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இதேபோல் திங்களன்று மாலை சீன துருப்புக்கள் இரும்பு கம்பிகள், ஈட்டிகள், கிளப்புகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை ஏந்தியபடி இந்திய ராணுவ முகாமை முற்றுகையிட்டனர்.

    முதல்முறையாக சீனா

    முதல்முறையாக சீனா

    அப்போது இந்திய இராணுவம் சீன ராணுவ துருப்புக்களை திரும்பி செல்லும்படி கட்டாயப்படுத்தியது. அப்போது ​​இந்திய வீரர்களை அச்சுறுத்துவதற்காக அவர்கள் 10-15 முறை வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். ஆனால் இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அங்கு சீன வீரர்களை இந்திய வீரர்கள் வலுவாக எதிர்கொண்டனர் . தற்போது சீனா ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியன் மூலம் 45 வருட இடைவெளிக்குப் பிறகு முதற்முறையாக எல்லையில் சீனா இந்தியாவிற்கு எதிராக துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 1975 ஆம் ஆண்டில் எல்லையில் சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியது. இத்னிடையே திங்கள் அன்று நடந்த சண்டையில் இந்திய துருப்புக்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    கோபத்தில் சீனா

    கோபத்தில் சீனா

    முக்பரி சிகரம் மற்றும் ரெசாங்-லா பகுதிகளில் உள்ள யுக்தி சார்ந்த உயரத்திலிருந்து இந்திய இராணுவத்தை அகற்றுவதே சீன துருப்புக்களின் முயற்சி என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மூன்று நான்கு நாட்களில் யுக்தி சார்ந்த உயரங்களைக் கைப்பற்ற சீன ராணுவம் (பி.எல்.ஏ) கவனம் செலுத்தி வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக இதற்காக திங்கள்கிழமை மாலை சீனப் படையினர் இரும்பு வேலியை சேதப்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

    சீனா புகார்

    சீனா புகார்

    மோல்டோ பகுதியில் சீன ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். பாங்காங் ஏரி பகுதியின் தெற்கு கரையைச் சுற்றியுள்ள மூலோபாய சிகரங்களில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதை சீனாவில் ஏற்க முடியவில்லை. திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்தினர். எல்லையை கடந்து பாங்காங் ஏரிக்கு அருகே "மூர்க்கத்தனமாக துப்பாக்கிச் சூடு" செய்ததாக அபாண்டமாக சீனா குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் இன்று திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

    English summary
    . Govt Sources said that On Monday evening as well, the Chinese troops were carrying rods, spears, clubs and sharp weapons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X