எல்லையில் பதற்றம்.. இந்தியா - சீனா இடையே 3ஆவது கட்ட பேச்சுவார்த்தை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்தியா- சீனா ஆகிய நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் அளவிலான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல் இரு பேச்சுவார்த்தைகள் நடந்த மால்டோவில் இந்த 3ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல் சுச்சூல் பகுதியில் நடைபெறுகிறது.

Recommended Video

    T-90 Bhishma tank| சக்தி வாய்ந்த பீரங்கிகளை எல்லையில் களமிறக்கிய India

    எல்லையில் சீனா படைகளை குவிப்பது, கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரி, கால்வன் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங், தேப்சாங் உள்ளிட்ட இந்திய பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவியுள்ளது.

    India, China to hold 3rd round of talks amid stand off near LAC

    இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று 3ஆவது கட்டமாக ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

    இன்று காலை 10.30 மணிக்கு சுச்சூல் பகுதியில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்ட்னினட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் தெற்கு ஜின்ஜியாங் ராணுவத்தின் தலைமை மேஜர் லியூ லின் ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.

    ஏற்கெனவே மால்டோ பகுதியில் ஜூன் 6 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் 3ஆவது கட்ட பேச்சுவார்த்தை சுச்சூல் பகுதியில் முதல் முறையாக நடைபெறுகிறது.

    எல்லையில் பதற்றத்தை தணிப்பது உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+