டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிக்க இந்த வாரத்தில் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை?

Google Oneindia Tamil News

டெல்லி: கிழக்கு லடாக்கில் பதற்றத்தை தணிக்க இந்த வாரத்தில் இந்தியா, சீனா இடையே ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.

Recommended Video

    India China Border Tension-ஐ தணிக்க இந்த வாரத்தில் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை?

    இந்தியா- சீனா இடையே கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்திய எல்லை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளுக்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளவும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன

    India , China to hold diplomatic talks by this week, sources says

    இந்த நிலையில் மே மாதம் முதல் வாரத்தில் இதுதொடர்பாக எழுந்த பிரச்சினை மோதலாக மாறியது. இதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி ராணுவ அளவிலான முதல் பேச்சுவார்த்தை சீனாவின் மால்டோ எல்லையில் நடந்தது.

    இதில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்வதாக உடன்பட்டனர். இந்த நிலையில் கடந்த 16-17-ஆம் தேதி இரவு சீன ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இரும்புக் கம்பிகளில் முள் சுற்றப்பட்டு அவற்றால் இந்திய வீரர்களை தாக்கியதாக புகைப்படங்கள் வெளியாகின.

    இனி எடுங்க துப்பாக்கியை.. சீன எல்லை விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்த மாஸ் மாற்றம் இனி எடுங்க துப்பாக்கியை.. சீன எல்லை விதிகளில் மத்திய அரசு கொண்டு வந்த மாஸ் மாற்றம்

    இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். 76 பேர் காயமடைந்தனர். இதற்கு இந்தியா கொடுத்த பதிலடியில் சீன ராணுவத்தினரும் பலியாகியிருக்கக் கூடும். ஆனால் அதை சீனா இன்னும் வெளியிடவில்லை. நாளை நடைபெறும் ரஷ்யா- இந்தியா- சீனா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இடையிலான கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.

    அது போல் வரும் 24 ஆம் தேதி ரஷ்யாவின் நடைபெறும் வெற்றி தினத்தில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ செல்கிறார். எனவே
    எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் இந்தியா சீனா ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடத்தப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    India and China to hold diplomatic talks by this week to deescalate the tension in Ladakh?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X