இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே அக்.12-ல் 7-வது கட்ட பேச்சுவார்த்தை
டெல்லி: இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே அக்டோபர் 12-ந் தேதி 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவின் ஊடுருவல் முறியடிப்பு நடவடிக்கையில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீனா தரப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதன்பின்னர் இந்தியா- சீனா இடையேயான பல்வேறு நிலைகளில் 6 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
சீனாவின் மால்டோ பகுதியில் கடந்த செப்டம்பர் 21-ந் தேதி 6-வது கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. பல மணிநேரங்கள் இரவிலும் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இந்திய தரப்பில் லெப்.ஜெனரல் ஹரீந்தர் சிங், பிஜிகே மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்பின்னர் இந்தியா- சீனா கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், எல்லையில் கூடுதல் படை குவிப்பை இருநாடுகளும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வரும் 12-ந் தேதி 7-வது கட்டமாக இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications