சீனாவோடு மோதல்.. இப்படித்தான் பிரச்சனையை தீர்க்க போகிறோம்.. இந்திய வெளியுறவுத்துறை அதிரடி அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனாவோடு நிலவி வரும் லடாக் எல்லை பிரச்சனையை இரண்டு நாடு பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Recommended Video

    சின்ன தாக்குதல் கூட இல்லாமல் சமாளித்த இந்தியா

    கடந்த ஒரு மாதமாக லடாக்கில் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வந்தது. இதனால் எல்லையில் போர் பதற்றம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டது. இதை அடுத்து நேற்று இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே சீனாவின் ஷுசுல் மோல்டோ பகுதியில் பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்தியாவின் ராணுவப் படையின் 14வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் எல்லைக்கு சென்று இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். சீனா சார்பாக சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    என்ன அறிக்கை

    என்ன அறிக்கை

    நேற்று மீட்டிங் நடந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்டு ஆலோசனை குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளும் பிரச்சனையை பேசி தீர்க்க முடிவு செய்து இருக்கிறோம். இரண்டு நாட்டு ஒப்பந்தங்கள் மூலம் இதை பேசி தீர்ப்போம். எல்லையில் அமைதி மற்றும் ஒற்றுமைதான் இது போன்ற ஒப்பந்தங்கள் செய்ய வழி வகுக்கும்.

    பேசி வருகிறோம்

    பேசி வருகிறோம்

    கடந்த சில நாட்களாக ராணுவ ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் இரண்டு நாட்டு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. பல்வேறு தளங்களில் இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எல்லை பிரச்சனை தொடர்பாக பேசி வருகிறோம். எல்லை பிரச்சனையை சுமுகமாக தீர்ப்பதே இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.

    இரண்டு நாட்டு உறவு

    இரண்டு நாட்டு உறவு

    எல்லையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது இரண்டு நாடுகளுக்கும் நல்லது. அங்கு இருக்கும் கசப்புகளை களைய வேண்டும். இரண்டு நாட்டு நட்பும் உறவும் மேம்பட தேவையான பணிகளை நாம் செய்ய வேண்டும், என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளும் லடாக் எல்லையில் மே மாதத்திற்கு முன் இருந்த நிலைக்கு செல்ல ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகும்.

    ஏப்ரல் முன்

    ஏப்ரல் முன்

    ஏப்ரல் மாதத்தில் இந்தியா - சீனா எல்லையில் பிரச்சனை இல்லை. லடாக் எல்லையில் சீனா எங்கும் அத்துமீறவில்லை. மே 5ம் தேதிதான் சீனா முதலில் லடாக் எல்லையில் அத்துமீறியது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் சீனா எல்லையில் அத்துமீறிய இடங்களில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்தது. இதற்கு சீனா ஒப்புக்கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் இந்த சண்டை சுமுகமாக முடிய வாய்ப்புள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+