இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 69,671 ஆக குறைந்தது... 2ஆம் இடத்தில் ஆந்திரா!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 61,43,019 லட்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 777 பேர் உயிரிழந்துள்ளனர். 50,98,573 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 9,47,235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50,98,573 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 96,352 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் இந்தியாவில்தான் ஒருநாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 69,671 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவுதான் என்றாலும், உலகளவில் இந்தியாதான் தற்போது புதிய ஒரு நாள் தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.நேற்று ஒரு நாளில் மட்டும் 777 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று

தொற்று

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 13,51,153 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் புதிதாக 11,921 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 180 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயில் இருந்து 10,49,947 பேர் மீண்டு வந்துள்ளனர். குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. 2,65,033 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாநிலத்தில் மட்டும் இதுவரைக்கும் 35,751 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பை

மும்பை

இந்த மாநிலத்தில் அதிகபட்சமாக புனேவில் 2,87,444 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 5,689 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் அதிகபட்சமாக 2,00,901 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்திலே இங்குதான் அதிகபட்சமாக 8,834 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அமட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு கோதாவரி

கிழக்கு கோதாவரி

இரண்டாவது இடத்தில் ஆந்திரப் பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரைக்கும் 6,81,161 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,12,300 பேர் மீண்டு வந்துள்ளனர். 5,745 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாள் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரைக்கும் இந்த மாநிலத்தில் 5,745 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாநிலத்தில் கிழக்கு கோதாவரியில் அதிகபட்சமாக 95,200 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 515 பேர் உயிரிழந்துள்ளனர்.

70 பேர் இறப்பு

70 பேர் இறப்பு

மூன்றாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரைக்கும் 5,86,397தொற்று பாதிப்பு ஏற்பட்டு, இன்னும் 5,30,708 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோயில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு நாளில் மட்டும் 5,554 ஆக இருந்துள்ளது. மொத்தம் இதுவரைக்கும் தமிழகத்தில் 9,383 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை

கோவை

தமிழகத்தில் சென்னையில் 1,64,744 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, இன்னும் 11,046 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,50,522 பேர் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 921 நேற்று ஒரு நாளில் மட்டும் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரைக்கும் 3,176 பேர் உயிரிழந்து, நேற்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து செங்கல்பட்டு 34,855 பேருடன் இரண்டாம் இடத்திலும், திருவள்ளூர் 31,887 பேருடன் மூன்றாம் இடத்திலும், 30,915 பேருடன் நான்காம் இடத்தில் கோவையும் உள்ளன.

பெங்களூரு

பெங்களூரு

நான்காம் இடத்தில் கர்நாடகா உள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரைக்கும் 5,82,458 பேர் உயிரிழந்துள்ளனர். 1,04,048 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,69,750 பேர் மீண்டு வந்துள்ளனர். மொத்தம் இதுவரைக்கும் இந்த மாநிலத்தில் 8,641 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 59 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூர் நகரில் மட்டும் 2,23,569 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 2,845 பேர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+