உலகிலேயே ஒரே நாளில் அதிக பலி, அதிக பாதிப்பு.. அமெரிக்கா, பிரேசிலை முந்தி இந்தியா முதலிடம்
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 70,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 918 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அமெரிக்கா மற்றும் பிரேசிலை ஒப்பிடும்போது பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதிகமாக உள்ளது
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,32,72,847 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 8,05,907 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1.48 கோடி பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 1,76,070 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 707 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இன்று அதிகாலை நிலவலப்படி ஒரே நாளில் 34,020 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் ஒரே நாளில் புதிதாக 50,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை கடந்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 114,250 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் சனிக்கிழமை ஒரே நாளில் 892 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் 30.43 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுளளனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 56,846 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 22,79,900 பேர் குணம் அடைந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் 7,06,138 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 918 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 70,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே ஒரே நாளில் உயிரிழப்பு, மற்றும் பாதிப்பு இந்தியாவில் தான் அதிகமாக ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் பிரேசிலை இந்தியா முந்தியுள்ளது.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications