Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India - Pakistan: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. ஜம்மு உள்பட நாடு முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றி பெற்றதும், நாடு முழுவதுதிலும் இந்திய அணி வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர். சில இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்காத பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறினர்.

india-defeats-pakistan-cricket-fans-celebrate-across-the-nation-including-jammu

இந்திய அணி வெற்றி

இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 127 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. 9 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இதையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 15 வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். பேட்டிங்கை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் (SKY) 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்து அசத்தினார். அபிஷேக் ஷர்மா 31 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கத்தை அளித்தார். திலக் வர்மா 31 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

நமது ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிக்கிறோம்

ஷாஹீன் அப்ரிடி கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடினாலும், பாகிஸ்தான் 127/9 என்ற இலக்கை மட்டுமே எட்டியது. அக்ஷர் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பாகிஸ்தான் அணியில், சாஹிப்ஸாதா ஃபர்ஹான் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். ஷாஹீன் அப்ரிடி 16 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:- வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம், நான் எப்போதும் செய்ய வேண்டும் என்று நினைத்த ஒரு விஷயம் - இறுதிவரை களத்தில் நின்று பேட் செய்வது, "இது ஒரு சரியான தருணம். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்த வெற்றியை நமது ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம்.

அவர்கள் மிகுந்த தைரியத்தைக் காட்டினார்கள். அவர்கள் தொடர்ந்து நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பார்கள் என்று நம்புகிறோம். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களை மகிழ்விக்க மேலும் பல வெற்றிகளை அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். டெல்லியைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர் அபிஷேக் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "இந்தியா இன்று வென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பழிவாங்கினார், இன்று எங்கள் வீரர்களும் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டார்.

துபாயில் இருந்த மற்றொரு இந்திய கிரிக்கெட் ரசிகர், பாகிஸ்தான் அணியின் பலவீனமான பீல்டிங்கை சுட்டிக்காட்டினார். "பாகிஸ்தான் தரப்பில் பீல்டிங் மோசமாக இருந்தது. நிறைய கேட்சுகள் கோட்டை விடப்பட்டன, பேட்டிங்கும் மிக மோசமாக இருந்ததாக தெரிவித்தார். அதே நேரத்தில் இந்திய பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி கூட்டு முயற்சியால் வெற்றி பெற்றது என்று நினைக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

வெற்றிக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பகிர்ந்தும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினர். ஜம்மு காஷ்மீரிலும் இந்திய அணி வெற்றி பெற்றதை உற்சாகமாக ரசிகர்கள் கொண்டாடியதை பார்க்க முடிந்தது. தெலுங்கானா, டெல்லி, குஜராத் என பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்திலும் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தன்ர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+