பங்களாதேஷ் விடவும் மோசமான நிலையில் இந்தியா.. மோடியின் மேஜிக் என்னாச்சு? மொத்தமாக காணாமல் போனதா?
இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் ஏற்கனவே 3வது, 4ஆவது இடத்தில் இருந்து தற்போது 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது உள்ளது. 2026ஆம் ஆண்டின் ஐஎம்எப் ஏப்ரல் மாத தரவுகளின் படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.15 டிரில்லியன் டாலராக உள்ளது.
அமெரிக்கா (32.38 டிரில்லியன்), சீனா (20.85 டிரில்லியன்), ஜெர்மனி (5.45 டிரில்லியன்), ஜப்பான் (4.38 டிரில்லியன்) மற்றும் இங்கிலாந்து (4.26 டிரில்லியன்) ஆகிய நாடுகளுக்கு பின் இந்தியா தள்ளப்பட்டு உள்ளது. ஈரான் போர் துவங்கியதில் இருந்து இந்திய பொருளாதாரத்தின் பலம் இழந்து வருகிறது, கடந்த 10 வருடமாக மலிவான கச்சா எண்ணெய் விலை காரணமாக இந்திய பொருளாதாரம் செழிப்பாக இருந்த நிலையில் தற்போது உண்மையான நிலை வெளிப்படுகிறது. இதைவிட முக்கியமான விஷயம் பங்களாதேஷ் விடவும் இந்தியா மோசமான நிலைக்கு சென்றுள்ளது கூடுதல் அதிர்ச்சி தகவல்.

இந்திய பொருளாதாரம்
இந்திய ஜிடிபி அளவில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டாலும், பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.48% ஆக உயர்ந்துள்ளது, இது உலகின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களில் ஒன்று. ஆனால் தனிநபர் சராசரி வருமானம் அதாவது பர் கேப்பிட்டா இன்கம் 2,813 டாலராக மட்டுமே உள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய திணறும் காரணத்தால் தனிநபர் வருமான பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ளது பங்களாதேஷ். புதிய அரசு அமைந்த பின்பு இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் சராசரி வருமானம்
2026-ம் ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) மதிப்பீட்டின்படி, இந்தியாவின் தனிநபர் சராசரி வருமானம் (நாமினல் ஜிடிபி பர் கேப்பிட்டா இன்கம்) பங்களாதேஷை விட சற்று குறைவாக இருக்கும் என கணித்துள்ளது.
இந்தியாவின் தனிநபர் சராசரி வருமானம் 2026-ல் 2,813 டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பங்களாதேஷின் தனிநபர் சராசரி வருமானம் 2,911 டாலராக இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. அதாவது, உலக நாடுகளின் வருமானத்தை டாலரில் அளவிடும்போது, அண்டை நாடான பங்களாதேஷ் இந்தியாவை விட சற்று முன்னிலை வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இதற்கு முக்கிய காரணம் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியே என்று பொருளாதார நிபுணர்கள் தெளிவாக்குகின்றனர்.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து, ஒரு டாலருக்கு 96.90 பைசா அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் உற்பத்தி மற்றும் வருமானத்தை டாலரில் கணக்கிடும்போது குறைந்து காணப்படுகிறது. ஐஎம்எப் அறிக்கையின்படி, இந்த ஆண்டு ரூபாய் மதிப்பு சுமார் 15 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
சொல்லப்போனால் டாலர் மதிப்பில் பங்காளாதேஷ் நாட்டின் நாணயத்தைய காட்டிலும் இந்திய ரூபாய் அதிகமாக குறைந்துள்ளதாலும், பாங்களாதேஷ் நாட்டின் பொருளாதாரத்தில் அந்நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து சப்போர்ட் செய்யும் காரணத்தால் நாணய மதிப்பு சரிவை கட்டுப்படுத்தப்ட்டு உள்ளது.
நாணய மதிப்பு மாற்றங்கள் தான் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பீட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இந்தியாவின் மொத்த பொருளாதார அளவு இன்னும் பங்களாதேஷை விட பல மடங்கு பெரியது என்பதை மறந்துவிடக் கூடாது.
பிபிபி அளவீட்டில் கெத்து
இந்த தகவலை முழுமையாக புரிந்துகொள்ள, ஒரு முக்கிய விஷயத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதுதான் 'பர்ச்சேசிங் பவர் பாரிட்டி' (பிபிபி) எனப்படும் மக்களின் வாங்கும் சக்தி அடிப்படையிலான தனிநபர் வருமானம். இந்த அளவீட்டில் இந்தியா இன்னும் முன்னிலையில் உள்ளது.
ஐஎம்எப் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் பிபிபி தனிநபர் வருமானம் சுமார் 11,789 டாலராக உள்ளது. பங்களாதேஷின் பிபிபி தனிநபர் வருமானம் 10,271 டாலராக மட்டுமே உள்ளது. அதாவது, இந்தியாவில் ஒரு ரூபாய் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு இன்னும் அதிகம் என்பதை இது காட்டுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்த சூழலில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் (எஃப்ஐஐ) நிலையும் கவனிக்கத்தக்கது. 2021 அக்டோபர் முதல் 2026 மே வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக, இந்திய பங்குச் சந்தையில் டாலர் அடிப்படையில் அவர்கள் எந்த லாபத்தையும் ஈட்டவில்லை என்று சந்தை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பிற காரணங்களால் அவர்களின் முதலீடுகள் டாலரில் பூஜ்ஜிய லாபத்தை தந்துள்ளன. இதனாலேயே வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது.















Click it and Unblock the Notifications