'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சாதனை! ஆப்பிள் உதிரி பாகங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா!
டெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான உதிரி பாகங்களை சீனாவுக்கும், வியட்நாமுக்கும் இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்லப்படுகிறது.
Economic Times செய்தி ஊடகம் இது தொடர்பான விவரங்களை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. மதர்சன் குரூப், ஜாபில், அக்யூஸ் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இந்தியாவிலிருந்து ஆப்பிள் தயாரிப்புகளுக்கான உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து தொழில்துறையினர் சிலர் கூறியதாக Economic Times தெரிவித்திருப்பதாவது, "கடந்த 20 ஆண்டுகளாக சீனா மற்றும் வியட்நாமில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தேவையான உதிரிபாகங்களை இந்தியா இறக்குமதி செய்து வந்திருந்தது. ஆனால் இன்று சீனாவுக்கும், வியட்நாமுக்கும் இங்கிருந்து நாம் ஏற்றுமதியை தொடங்கி இருக்கிறோம். இது மிகப்பெரிய வளர்ச்சி. மேக் இன் இந்தியா திட்டத்தில் செய்யப்பட்ட சாதனை இது" என்று தெரிவித்திருக்கிறது.
இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்யும் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டம், இந்திய மின்னணு துறைக்கு உதவியாக இருக்கும். இந்திய மின்னணு துறை சர்வதேச அளவில் பெரிய வளர்ச்சியை எட்டுவதற்கு இது பயன்படும். தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஸ்மார்ட் வாட்ச், இயர்பாட், ஐ-பேட் பென்சில் உள்ளிட்டவை சீனா, வியட்நாமில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கான உதிரிபாகங்களைதான் இந்தியா ஏற்றுமதி செய்ய தொடங்கியிருக்கிறது.
இந்த மின்னணு உதிரிபாகங்களை தயாரிப்பது அவ்வளவு எளிதானது கிடையாது. உயர் தர தொழில்நுட்ப பணியாளர்கள், அதற்கான கருவில் இருக்க வேண்டும். இந்தியா இந்த ஏற்றுமதியை சாத்தியமாக்கியதன் மூலம், இங்கும் திறமை வாய்ந்த தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பதை உலகம் அறிய செய்திருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் முறையாக, இந்தியாவிலிருந்து டாட்டா எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தை தனது முதல் சப்ளையராக ஆப்பிள் இணைத்துக் கொண்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு 2 கூடுதல் சப்ளைகளை ஆப்பிள் சேர்த்துக் கொண்டது. அதில் ஒன்றுதான் ஜபில். இது புனேவில் அமைந்துள்ள தொழிற்சாலையிலிருந்து இயர்பாட்களுக்கான உதிரிபாகங்களை உருவாக்கி வருகிறது. அதேபோல கர்நாடகாவின் ஹப்பாலியில் அமைந்துள்ள அக்யூஸ் நிறுவனம், மேக்-புக்ஸிற்கான உதிரி பாகங்களை தயாரித்து கொடுக்கிறது.
தற்போது டாடா எலக்ட்ரானிக்ஸ், மதர்சன், ஜாபில் மற்றும் அக்வஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்-புக், இயர்பாட், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை முழுமையாக தயாரிப்பதற்கான அடித்தளம் இந்த நிறுவனங்கள் மூலம் போடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் போன்களை ஆப்பிள் ஏற்றுமதி செய்திருக்கிறது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாகும். தற்போது மாறிவரும் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு ஆப்பிள் இந்தியா மீது ஒரு கண்ணை வைத்திருக்கிறது. சீனாவுடன் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால் ஆப்பிளின் அடுத்த தாவல் இந்தியாவுக்குதான் இருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications