வெனிசுலாவில் சிக்கிய இந்தியர்கள்.! அமெரிக்கா இறங்கி 24 மணி நேரமாச்சு.. மத்திய அரசு முக்கிய கருத்து
டெல்லி: வெனிசுலாவில் அமெரிக்கா இறங்கித் தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் அதிபரை நாடுகடத்தியது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே வெனிசுலாவில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், வெனிசுலாவில் வாழும் இந்தியர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்கா கண்டத்தில் இருக்கும் குட்டி நாடு வெனிசுலா. இந்த நாட்டின் மீது அமெரிக்கப் படைகள் நேற்றைய தினம் திடீரெனத் தாக்குதல் நடத்தியது. டிரம்ப் உத்தரவின்படி நடந்த இந்தத் தாக்குதலில் வெனிசுலா தலைநகர் கராகஸில் இருந்து அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சீலியா ஃபுளோரசும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா கருத்து
வெனிசுலா அதிபர் மீது போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டனர். நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் அவர்கள் மீதான வழக்கு நடைபெற இருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. வெனிசுலா மீது அமெரிக்கா நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், இன்று இந்தியா இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறது.
தேவையான உதவிகள்
வெனிசுலாவில் நிலவும் சூழல் கவலையளிப்பதாகவும், அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும் எப்போதும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமாகவே பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், வெனிசுலாவில் இருக்கும் இந்தியர்களை அங்குள்ள இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது..
டிரம்ப் தாக்குதல்
வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா பல மாதங்களாகத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியது. அங்கு மதுரோ ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மதுரோவின் 12 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுகட்டிய அமெரிக்கா, அவரை போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுக்காகக் கைது செய்து அமெரிக்காவில் நாடுகடத்தியது. அவர் இப்போது நியூயார்க்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மதுரோ கைவிலங்கிடப்பட்டு, கண்களில் துணி கட்டப்பட்டு கரிபியன் கடற்படைக் கப்பலில் இருந்த புகைப்படத்தை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டார். மதுரோவை கைது செய்யும் அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கையைத் தனது மார்-எ-லாகோ எஸ்டேட்டில் இருந்தபடியே டிவி நிகழ்ச்சியைப் போல நேரலையில் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்து யார்?
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும் 2025ல் நோபல் அமைதி விருது பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையை வரவேற்கும் வகையில் ட்வீட் செய்திருந்தார். வெனிசுலா நாட்டிற்குச் சுதந்திரம் பெறும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டார். பல ஆண்டுகளாகவே மதுரோவுக்கு எதிராகச் செயல்பட்டு வருபவர் மச்சாடோ, 2024 வெனிசுலா தேர்தலில் மதுரோவுக்கு எதிராகப் போட்டியிட்ட எட்முண்டோ கோன்சாலஸ் அதிபராகப் பதவியேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சிலர் மச்சாடோவே வெனிசுலாவின் அதிபராகப் பதவியேற்று, வழிநடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் அதற்கு வாய்ப்பில்லை என்று நிராகரித்தார். மச்சாடோவுக்கு வெனிசுலாவில் போதிய ஆதரவோ மரியாதையோ இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
-
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications