இலங்கை: இந்தியாவின் ரூ. 8,265 கோடி கடன் உதவி திட்டம் - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கைக்கான இந்தியாவின் ரூ. 8,265 கோடி கடன் உதவி திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து கொண்டிருக்கிறது. இதனால் இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகவும் நேரிட்டது.

India extends $1bn credit facility to Sri Lanka

முதலில் இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே. அவர் இலங்கையைவிட்டு தப்பி ஓடி மீண்டும் நாடு திரும்பினார். அவரைத் தொடர்ந்து இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சே, அந்நாட்டைவிட்டு தப்பி ஓடினார். ஒவ்வொரு நாடாக கோத்தபாய ராஜபக்சே அடைக்கலம் கோரினார். ஆனால் எந்த ஒரு நாடும் கோத்தபாய ராஜபக்சேவும் அடைக்கலம் தர முன்வரவில்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் இலங்கைக்கே திரும்பினார் கோத்தபாய. இலங்கையில் தற்போது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே இருந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இலங்கையை பொருளாதார பேரழிவியில் இருந்து மீட்க இந்தியா ஏராளமான நிதி உதவி வழங்கி உள்ளது. இலங்கைக்கு இந்தியா தற்போது வரை சுமார் ரூ. 32,000 கோடி கடன் உதவி வழங்கி உள்ளது. இலங்கைக்கான அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், எரிபொருட்கள் கொள்முதல் செய்வதற்காக இந்த கடனுதவியை இந்தியா வழங்கி இருக்கிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவி செய்வதற்கும் இந்தியா சான்றிதழ்களை வழங்கியது.

India extends $1bn credit facility to Sri Lanka

இந்நிலையில் இலங்கைக்கான ரூ. 32,000 கோடி கடன் உதவியில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ. 8,265 கோடி கடன் தொகையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் ரூ. 8,265 கோடி கடனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இலங்கை திருப்பிச் செலுத்தலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+