ஒரே ரூட்டில் இரு வேறு மெட்ரோக்கள்.. 120 கிமீ வேகத்தில் பாயும்.. நாட்டிலேயே முதல்முறையாக "நமோ மெட்ரோ"
டெல்லி: டெல்லி மீரட் அதிவிரைவு மெட்ரோ முழுமையாக இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் ஒரே நெட்வொர்க்கில் இரண்டு மெட்ரோ ரயில் சேவைகள் இயங்குகிறது. அது எப்படிச் சாத்தியம்.. 120 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த மெட்ரோவின் சிறப்புகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டெல்லி- மீரட் அதிவிரைவு ரயில் வழித்தடத்தின் முழு 82 கி.மீ பாதை கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. மீரட் மெட்ரோ சேவையை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மணிக்கு 120 கி.மீ வேகத்தில் இயங்கும் மீரட் மெட்ரோ இந்தியாவின் அதிவேக அமைப்பாகும்.

மெட்ரோ
இதன் மூலம் டெல்லி- மீரட் பயண நேரம் சுமார் 55 நிமிடங்களாகக் குறையும். சதப்தி நகர் நிலையத்தில் இருந்து மெட்ரோ சேவையைப் பிரமதர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் முதல் மண்டல அதிவேகப் போக்குவரத்து அமைப்பாக (RRTS) இந்த 82.15 கி.மீ டெல்லி-காஜியாபாத்-மீரட் 'நமோ பாரத்' வழித்தடம் அமைந்துள்ளது. டெல்லி சராய் காலே கான் முதல் உத்தரப் பிரதேசத்தின் மோடிபுரம் வரை நீளும் இத்திட்டம், இன்று முதல் முழுமையாகச் செயல்படுகிறது.
இந்த மெட்ரோ இரு பிரிவுகளாக உள்ளன. முதல் 23 கிமீ பிரிவு மீரட் நகரத்திற்குள் தனது சேவையை வழங்கும். அதேபோல டெல்லி மீரட் மெட்ரோ ரயில் சேவையும் நமோ பாரத் என்ற பெயரில் இயங்குகிறது. மீரட் மெட்ரோ பிரிவு தன்னுடைய தண்டவாளங்களையும் உள்கட்டமைப்புகளையும் நமோ பாரத் ரயிலுடன் பகிர்ந்துகொள்ளும். பயணிகள் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறாமலேயே தங்களுக்குத் தேவையான மெட்ரோ ரயிலில் ஏறிக் கொள்ளலாம்.
நமோ பாரத் சிறப்புகள்
- அதிகபட்ச வேகம்- மணிக்கு 135 கி.மீ வேகம்
- இயக்கப்படும் வேகம்- மணிக்கு 120 கி.மீ வேகம்
- 21 கி.மீ தூரத்தைச் சுமார் 30 நிமிடங்களில் கடக்க முடியும்.
- இந்த 23 கி.மீ வழித்தடம் 16 கி.மீ உயர்மட்டப் பாதையாகவும், 7 கி.மீ சுரங்கப்பாதையாகவும் உள்ளது.
- மொத்தம் 13 நிலையங்கள்: 9 உயர்மட்ட, 3 சுரங்கப்பாதை மற்றும் ஒரு டிப்போ அமைகிறது.
ஒரே டிக்கெட்
பீக் ஹவரில் உச்சபட்ச நேரத்தில் 5-10 நிமிடங்களுக்கும், சாதாரண நேரத்தில் 10-15 நிமிடங்களுக்கும் ஒருமுறையும் நமோ பாரத் இயக்கப்படும். வாரநாட்கள்/ சனிக்கிழமைகளில் காலை 6-10 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8-10 மணி வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மீரட் மெட்ரோ, நமோ மெட்ரோ என இரண்டிற்கும் ஒரே டிக்கெட்டை பயன்படுத்தலாம். கட்டண விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சிறப்புகள்
மீரட் மெட்ரோ ரயில்கள் மூன்று பெட்டிகள் கொண்டவை. 173 இருக்கைகள் உட்பட மொத்தம் 700க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. ஏசி பெட்டிகள், மெத்தை இருக்கைகள், சிசிடிவி கேமராக்கள், யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள் போன்ற நவீன வசதிகள் பயணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளன.
பயணிகள் பாதுகாப்பிற்காக அவசரக்காலத் தொடர்பு அமைப்புகள், எச்சரிக்கை மணி, தீயணைப்பான்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில் இயக்கத்துடன் ஒருங்கிணைந்த நடைமேடை கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு இருக்கைகள், சக்கர நாற்காலிகள், லிஃப்ட்கள் எனத் தேவையான பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வேறுபாடுகள்
'நமோ பாரத்' மற்றும் மீரட் மெட்ரோ இரண்டும் ஒரே உள்கட்டமைப்பைப் பயன்படுத்தினாலும், அவற்றின் நோக்கங்கள் வேறுபடுகின்றன. நமோ பாரத் ரயில்கள் நகரங்களுக்கு இடையேயான மண்டலப் பயணங்களுக்காக உருவாக்கப்பட்டது. அவை மணிக்கு 120 கி.மீ வேகத்தில் இயங்கும். இதன் மூலம் டெல்லி- மீரட் பயணம் சுமார் 55 நிமிடங்களில் முடிவடையும். இது மீரட், காஜியாபாத், நொய்டா, டெல்லி, குருகிராம் நகரங்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துவதோடு, சாலை நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும்.
மறுபுறம், மீரட் மெட்ரோ ரயில் நகரத்திற்குள் உள்ள பயணிகளுக்குச் சேவை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. 23 கி.மீ வழித்தடத்தில் இயங்கும் இந்த மெட்ரோவில் நாம், சுமார் 30 நிமிடங்களில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முடியும்!
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications