கைவிட்ட US.. டிரம்பின் மூக்கை உடைக்கும் இந்தியா.. 50 நாடுகளுக்கு செல்லும் பொருட்கள்! மாஸ்டர் பிளான்
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். நாளை முதல் 50 சதவீத வரி முழுமையாக செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் டிரம்பின் வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நம் நாடு 50 நாடுகளை அடையாளம் கண்டுள்ளது. இந்த நாடுகள் என்னென்ன என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை தீட்டி உள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இந்த வரிகளை விதித்துள்ளார்.

முதற்கட்டமாக கடந்த 7 ம்தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்தது. வரும் 27 ம்தேதி அடுத்தகட்டமாக 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது. இதற்கான நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி என்பது முழுமையாக அமலுக்கு வர உள்ளது.
இது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதிகப்படியான வரியால் அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய பொருட்களின் ஏற்றுமதி சரியும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் டிரம்பின் வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நடவடிக்கையில் தீவிரமாக மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தகத்தை அதிகரித்து, வரியை குறைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.
இதன் அடுத்தக்கட்டமாக அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய பொருட்களை பிற நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நம் நாட்டின் வர்த்தக அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா மீதான வரியை அமெரிக்கா நிறுத்தி வைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அதேபோல் இந்தியாவுக்கான நிவாரணம் வழங்கவும் அமெரிக்கா தயாராக இல்லை.
இதனால் டிரம்பின் வரி விதிப்பால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவுக்கு பதில் மாற்று மார்க்கெட்டை பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவுக்கான ஏற்றுமதியை பிற நாடுகளுக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி, உணவு, லெதர் பொருட்கள், கடல்சார்ந்த பொருட்களை வேறு நாடுகளக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சுமார் 50 நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நாடுகள், சீனா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்டவை இதில் அடங்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், பாலஸ்தீன், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி உள்ளிட்டவை மத்திய கிழக்கு நாடுகளாக உள்ளன.
அதேபோல் லத்தீன் அமெரிக்கா என்றால் மொத்தம் 42 நாடுகளை குறிக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பிரேசில், அர்ஜென்டினா, பனாமா, போலிவியா, உருகுவே, ஈகுவடார், கொலம்பியா, வெனிசுலா உள்பட பல நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. இந்நிலையில் தான் சீனா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளான உள்ளன. இதில் 50 நாடுகளுக்கு தான் நம் நாடு பொருட்களின் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications