டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹுவாவே முதல் அலிபாபா வரை.. சீன ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு.. கட்டம் கட்டிய இந்தியா.. ஆக்சன்!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருந்த நிலையில் தற்போது சீனாவின் முக்கியமான நிறுவனங்களை இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை கவனிக்க தொடங்கி உள்ளது.

சீனாவுடன் சண்டை நிலவி வரும் நிலையில் இந்தியாவில் சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ் இது என்று கூறுகிறார்கள்.

டிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட்ட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத போர்க்கப்பல்.. அந்தமானுக்கு வருகிறது அமெரிக்காவின் அணு ஆயுத போர்க்கப்பல்.. அந்தமானுக்கு வருகிறது அமெரிக்காவின்

கவனிக்கிறது

கவனிக்கிறது

சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருந்த நிலையில் தற்போது சீனாவின் முக்கியமான நிறுவனங்களை இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை கவனிக்க தொடங்கி உள்ளது. அதன்படி சீனாவின் பிஎல்ஏ எனப்படும் (People's Liberation Army -PLA) ராணுவத்துடன் தொடர்பு உள்ளதாக இந்த நிறுவனங்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே இவர்கள் ராணுவத்துடன் தொடர்பில் உள்ளனர்.

ராணுவம் எப்படி

ராணுவம் எப்படி

சீனாவை சேர்ந்த ஹுவாவே, அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்கள் மீது இதற்கான புகார் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7நிறுவனங்கள் இந்த புகாரில் சிக்கி இருக்கிறது. ஹுவாவே, அலிபாபா, டென்சென்ட், எஸ்ஏஐசி, சிந்தியா ஸ்டீல்ஸ், சிங்சிங் கேத்தி இன்டர்நேஷன், சீனா எலக்ட்ரானிக் டெக்னலாஜி குருப் ஆகிய நிறுவனங்கள் மீது இந்த குறி வைக்கப்பட்டு உள்ளது.

தொடர்பு

தொடர்பு

சீனாவின் ராணுவத்துடன் இவர்கள் நெருக்கமாக இருந்ததாகவும், உளவு பார்த்ததாகவும் இவர்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களை கண்காணிக்கும் முடிவில் இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை களமிறங்கி உள்ளது. இதில் முன்னதாக அலிபாபா,டென்சென்ட் நிறுவனங்கள் சீனாவின் ராணுவத்திற்காக சில புரொஜெக்ட்களை செய்ததாக கூறப்படுகிறது.

என்ன திட்டம்

என்ன திட்டம்

அதாவது சீனாவின் ராணுவத்திற்காக இவர்கள் சில ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்நாட்டு பாதுகாப்பு துறையில் இவர்கள் தீவிர கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த நிறுவனங்கள் மீது உளவுத்துறை கவனம் செலுத்தி உள்ளது . அதிலும் அலிபாபா நிறுவனம் இந்தியாவில் பேடிஎம் , சோமேட்டோ, பிக் பேஸ்கெட், ஸ்நாப்டீல், எஸ்பிரஸ்பெஸ் ஆகிய நிறுவனங்கள் மீது முதலீடும் செய்துள்ளது.

Recommended Video

    Huawei வைத்து China-வை அசைத்து பார்க்கும் உலக நாடுகள்
     ஏதோ தொடர்பு

    ஏதோ தொடர்பு

    சீனாவின் 7 நிறுவனங்களும் எதோ ஒரு வகையில் சீனாவின் ராணுவத்துடன் தொடர்பில் இருந்துள்ளது. ராணுவத்துடன் ஏதோ ஒரு வகையில் ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்தியாவில் இருக்கும் இந்த நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க தற்போது மத்திய உளவுத்துறை முடிவு செய்துள்ளது. ஆனால் இவர்கள் மீது நேரடியாக எந்த புகாரும் வைக்கப்படவில்லை. முன்னதாக இந்தியாவில் 5ஜி ஏலத்தில் இருந்து ஹுவாவே நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    India focuses on 7 Chinese firms for its connection with PLA army.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X