"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த டேட்டா இப்போது வெளியாகியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான பாஜகவிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் சுனாமியில் சிக்கப் போகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியிருந்த நிலையில், அதற்கு பாஜக பதிலடி கொடுத்து வருகிறது.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இல்லை என்றே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வந்தனர். குறிப்பாக இந்தியா ஒரு பொருளாதாரச் சுனாமியில் சிக்கப் போவதாகக் கூட ராகுல் காந்தி நேரடியாக விமர்சித்திருந்தார்.

India GDP Growth

பொருளாதார வளர்ச்சி

இந்தச் சூழலில் தான் 2025- 2026 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருப்பதாக பாஜக கூறியுள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதத்தை எட்டியுள்ளதாக பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார். இதன் மூலம், உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகப் பெருமிதம் கொண்டிருக்கிறார்..

பொருளாதாரச் சுனாமி எங்கே?

ராகுல் காந்தி "பொருளாதாரச் சுனாமி" என்று விமர்சித்து வந்த நிலையில், அதற்கு இந்த நம்பர்கள் தான் சரியான பதிலடி என்றும் இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரம் எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்றும் பாஜக தரப்பு கூறுகிறது. இந்த நிதியாண்டின் நான்கு காலாண்டுகளிலும் இந்தியாவின் வளர்ச்சி சீராக இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

மற்ற நாடுகள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வளர்ந்த உலக நாடுகளின் ஜிடிபியோடு ஒப்பிடும்போது இந்தியாவின் இந்த 7.7% வளர்ச்சி பிரம்மாண்டமாகத் தெரிகிறது. ஏனென்றால், வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மெதுவாகவே இருந்துள்ளது. உதாரணமாக ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி வெறும் 0.4%ஆக உள்ளது. ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி 0.8%ஆக உள்ள நிலையில், ஐரோப்பிய மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி 1.3%ஆகவும் ஜி7 நாடுகளின் சராசரியாகப் பொருளாதார வளர்ச்சி 1.6%ஆகவும் இருக்கிறது. வளர்ந்து வரும் பிற நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, மெக்சிகோ, தாய்லாந்து போன்ற நாடுகளை விடவும் இந்தியா அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது.

ஆளும் தரப்பு

இந்தியப் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்லும் ஆளும் தரப்பினர் அதற்கு சப்போர்ட்டாக சில டேட்டாவை முன்வைக்கிறார்கள். அதில் முக்கியமாக இந்தியாவின் வாகன விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு ஆல்-டைம் உச்சத்தைத் தொட்டுள்ளது. உற்பத்தித் துறையிலும் புதிய விரிவாக்கங்களுடன் தொடர்ந்து வலுவாக இயங்கி வருகிறது. மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. மேலும், வங்கிகளின் கடன் வளர்ச்சி நல்ல நிலையில் இருப்பதோடு, இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பும் சிறப்பாக இருக்கிறது.

இவை அனைத்தும் நுகர்வோர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறதே தவிர, பொருளாதாரம் நலிவடைந்துள்ளதைக் காட்டவில்லை என்பது ஆளுங்கட்சியின் வாதமாக இருக்கிறது.

எதிர்க்கட்சியினர்

ஆனால், இந்த 7.7% ஜிடிபி நம்பரை மட்டுமே பார்த்து ஏமாந்துவிடக் கூடாது எனப் பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரிக்கிறார்கள். இந்தியாவின் உண்மையான பிரச்சனைகளை இந்த நம்பர்கள் மறைத்துவிடுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் இப்போது K-Shaped வளர்ச்சி இருக்கிறது என்பதே அவர்கள் வாதம். அதாவது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரும் பணக்காரர்களும் அசுர வளர்ச்சியைச் சந்திக்கும் அதே வேளையில், கிராமப்புறக் கூலித் தொழிலாளர்களின் வருமானம் தேக்கமடைந்துள்ளது. இதனால் அடிமட்ட மக்களின் நுகர்வுத் திறன் சுருங்கியுள்ளது.

நகர்ப்புறங்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான பணவீக்க அழுத்தம் மக்களைத் திணறடித்து வருகிறது. தனியார்த் துறையின் முதலீடுகள் இன்னும் சமச்சீரற்ற முறையிலேயே உள்ளன என்பதே அவர்கள் வாதமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+