இந்தியாவில் அதிபர் டிரம்ப்.. குஜராத்தில் செம உரை.. தாஜ்மஹாலை கண்டு ரசித்தார்.. முதல் நாளே மாஸ்!
அகமதாபாத்: இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை 1 மணிநேரம் கண்டு ரசித்தார் டிரம்ப்.
Recommended Video
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், 2 நாட்கள் பயணமாக இன்று முற்பகல் இந்தியா வருகை தந்தார். அதிபர் டிரம்ப்புடன் அவரது குடுபத்தினர் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் இந்தியா வருகை தந்துள்ளனர்.

அகமதாபாத் விமான நிலையத்தில்..
டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. விமான நிலையத்தில் டிரம்ப்பை வரவேற்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குஜராத் பாரம்பரிய முறைப்படி சங்கொலி முழங்கப்பட்டது.

சபர்மதி ஆசிரமத்தில்
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்து டிரம்ப் சென்றார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையில் பல லட்சக்கணக்கானோர் திரண்டு டிரம்ப்பை வரவேற்றனர்.

சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு நூலால் ஆன மாலையை டிரம்ப் அணிவித்தார். பின்னர் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களையும் டிரம்ப் பார்வையிட்டார். காந்தியடிகளின் கைராட்டையை ஆர்வமுடன் பார்த்த டிரம்புக்கு அதை எப்படி இயக்குவது என ஆசிரம நிர்வாகிகள் விளக்கினர்.
குரங்கு பொம்மைகள்
அங்கு இருந்த தீயவற்றை பார்க்காதே; தீயவற்றை பேசாதே; தீயவற்றை கேட்காதே என்ற தத்துவத்தை விளக்கும் குரங்கு பொம்மை குறித்தும் டிரம்ப்புக்கு மோடி விளக்கினார். பின்னர் சபர்மதி ஆசிரமத்தின் விருந்தினர் வருகை பதிவேட்டில் டிரம்ப், அவரது மனைவி மெலானி கையெழுத்திட்டனர்.

நமஸ்தே டிரம்ப்
இதனைத் தொடர்ந்து மோதிரா விளையாட்டு மைதானத்துக்கு பிரதமர் மோடி, டிரம்ப் ஆகியோர் சென்றனர். உலகின் மிகப் பெரிய விளையாட்டு மைதானமான இங்கு, நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றறது. பல லட்சம் பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் உரையாற்றினர்.

ஆக்ரா பயணம்

அகமதாபாத் நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பின்னர் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை டிரம்ப் பார்வையிட ஆக்ரா சென்றடைந்தார் டிரம்ப். ஆக்ரா விமான நிலையத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். ஆளுநர் ஆனந்தி பென் உள்ளிட்டோர் டிரம்ப்பை வரவேற்றனர். விமான நிலையத்தில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் டிரம்ப்புக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதனை கைதட்டி ரசித்தார் டிரம்ப். பின்னர் தாஜ்மஹாலை பார்வையிட சாலை மார்க்கமாக சென்றார் டிரம்ப்.

அங்கு சுமார் 1 மணிநேரம் மனைவி மெலானியாவுடன் தாஜ்மஹால் அழகை ரசித்து மகிழ்ந்தா டிரம்ப். ஆக்ரா பயணத்தை முடித்த பின்னர் டெல்லி சென்றார் டிரம்ப்.

டெல்லியில் நாளை ஜனாதிபதி மாளிகையில் டிரம்ப்-க்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பளிக்கப்படுகிறது. பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியின் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications