அமெரிக்கா, பிரிட்டனை விட அதிக தடுப்பூசி போட்டாச்சு- மத்திய அரசு பெருமிதம்! ஆனா 2வது டோஸ் ரொம்ப கம்மி
டெல்லி: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை விட இந்தியா அதிக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் லாவ் அகர்வால். அப்போது அவர் கூறுகையில்,
இந்தியாவில் 34 கோடி பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம். அதேநேரம் அமெரிக்காவில் 32.8 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, பிரிட்டனில் 7.79 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

குணமடைவோர் அதிகம்
மேலும், கடந்த வாரத்தை ஒப்பிட்டால் இந்த வாரம் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது . சராசரியாக தற்போது 46 ஆயிரம் தினசரி பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மே மூன்றாவது வாரத்தில் ரெக்கவரி ரேட் 81 சதவீதமாக இருந்தது, தற்போது அது 97 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.

10 மாவட்டங்களின் மீது கவனம்
நாடு முழுக்க 71 மாவட்டங்களில் மட்டும் தற்போது பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அந்த மாவட்டங்களில் பாசிட்டிவ் ரேட் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கிறது. அதாவது 100 பேருக்கு பரிசோதனை செய்தால் 10 பேருக்கு மேல் நோய் பாதிப்பு இருக்கிறது. எந்த எந்தப் பகுதிகளில் நோய் பாதிப்பு அதிகரிக்கிறதோ அது கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக மாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யதார்த்த நிலை இதுதான்
அமெரிக்கா மற்றும் பிரிட்டனை விட நாம் அதிகப்படியான தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம் என்று மத்திய அரசு சார்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டாலும் கூட மொத்த மக்கள் தொகை அடிப்படையில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கையை பார்த்தால் பிரிட்டனில் 49.5 சதவீத மக்கள் 2 டேஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
Recommended Video

இந்தியாவில் கம்மி
அதேநேரம் இந்தியாவில் 2 டோஸ் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மொத்த மக்கள் தொகையில் 4.3 சதவீதம் மட்டும்தான். 50 சதவீதம் பேருக்கு மேல் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான் கொரோனா 3வது அல்லது 4வது நோய் பரவல் அலையை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்காவும் அபாரம்
ஆனால் சமீபகாலமாகத்தான் மக்கள் மத்தியில் தடுப்பூசி போடும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக தடுப்பூசி அளவு அதிகரித்து இருந்தாலும், இரண்டு டோஸ்கள் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்கிறார்கள் சுகாதார துறை வல்லுநர்கள். அமெரிக்காவைப் பொறுத்த அளவில், மொத்த மக்கள் தொகையில் 47.5 சதவீத மக்கள், முழுமையாக, அதாவது 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications