துபாயில் நடந்த மீட்டிங்! கழற்றி விடப்படும் பாகிஸ்தான்.. தாலிபான்களுடன் இந்தியா முக்கிய மூவ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேற்று துபாயில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சந்தித்திருக்கிறார். பாகிஸ்தானை தனிமைப்படுத்த, தாலிபான்களுடன் இந்தியா கூட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு சமீப காலங்களாக மிக மோசமாக சென்றுக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் விட்டால், இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று கடுமையாக தாக்கிக்கொள்ளும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா முக்கிய மூவ் செய்திருக்கிறது.

Taliban Afghanistan Pakistan

தாலிபான்கள்-பாகிஸ்தான் போர்:

பாகிஸ்தானில் அடிக்கடி குண்டு வெடிப்பு நடப்பதும், இதனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதும் எல்லோருக்குமே தெரியும். இப்படி ஒவ்வொரு முறை நடக்கும்போதும் உலக நாடுகள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வரும். எனவே இந்த பிரச்சனை குறித்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை அடையாளம் கண்டது. தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் இருக்கும் எல்லையில் பதுங்கி இருந்து செயல்படுவதையும் ராணுவம் கண்டுபிடித்தது.

அப்புறம் என்ன ரெண்டு, மூன்று ராணுவ விமானங்களை அனுப்பி அவர்கள் இருக்கும் இடத்தில் குண்டு போட்டது. இதில் 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், உயிரிழந்தவர்களில் பொதுமக்கள்தான் அதிகம் என்றும், பாகிஸ்தான் சொல்வதை போல தீவிரவாதிகள் இங்கு இல்லை என்றும் தாலிபான்கள் பொங்கினர். எனவே இரு நாடுகளுக்கு இடையே இப்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு:

இந்த போர் பதற்றம் இந்தியாவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது ஆப்கானிஸ்தானை கொம்பு சீவி விட்டு, பாகிஸ்தானுடன் மோதவிட்டால் அவங்க ரெண்டு பேரும் அடிச்கிட்டு கிடப்பாங்க. நமக்கு பெரிய தொந்தரவு இருக்காது. எல்லையிலும் கொஞ்ச காலத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளின் ஊடுருவல் குறையும். இந்த யோசனையின்படி தற்போது ஆப்கானிஸ்தானை இந்தியா அரவணைத்து வருகிறது.

நேத்து வரைக்கும், தாலிபான்கள் தீவிரவாதிகள் என்றும், அவர்களுடன் அன்னம் தண்ணி பழக கூடாது என்றும் பேசி வந்த இந்தியா, தற்போது அவர்களின் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பை நடத்த இதுதான் காரணம்.

பாகிஸ்தானை தனிமைப்படுத்த திட்டம்:

அங்க பாருங்க, அவங்களை விட நாம எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்ல இந்தியாவுக்கு ஒரு நாடு வேண்டும். அது பாகிஸ்தானாக இருந்தால் இன்னும் நல்லதா போச்சு. எனவே ஆப்கானிஸ்தானை வைத்து பாகிஸ்தானை கட்டம் கட்டவும், தனிமைப்படுத்தவும் இந்தியா திட்டமிட்டு வருவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது, அதாவது 2025ம் ஆண்டு ஜனவரி தொடங்கி, 2027 டிசம்பர் வரை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் இடம் பெற்றிருக்கிறது. இந்த நேரத்தில் இந்தியாவை பற்றி ஏதாவது ஏழரையை கிளப்பிவிடக்கூடாது. எனவே, பாகிஸ்தானின் கவனம் முழுவதும் ஆப்கானிஸ்தான் பக்கம் இருக்க வேண்டும் என்பதால் தாலிபான்களுடன் இந்தியா கை கோர்த்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியாவின் முக்கிய மூவ்:

எனவே இதையெல்லாம் மனதில் வைத்து, நேற்று தாலிபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சர் மவ்லவி அமீர்கானை சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசியிருக்கிறார். இந்த பேச்சில் சில விஷயங்களில் இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது கிரிக்கெட்டிலும், ஈரானின் சபஹர் துறைமுக திட்டத்திலும் ஒத்துழைப்பு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

கூடுதலாக இந்தியா தரப்பில், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க உதவி செய்வதாகவும் வாக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+