8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை! கத்தார் நீதிமன்றத் தீர்ப்பால் இந்தியா அதிர்ச்சி
டெல்லி: வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனம் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளையும் வழங்கி வருகிறது.

இவர்கள் 8 பேரும் கத்தார் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கி உளவு பார்த்ததாக கத்தார் அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுடைய கைது குறித்து கத்தார் அரசு எந்த அறிக்கையையும் இந்திய அரசுக்கு அனுப்பவில்லை என தெரிகிறது.
அவர்களுடைய குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில் அவர்களை மீட்க இந்திய அரசு சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உளவு பார்த்ததாக 8 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு கத்தார் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வந்தது. இந்த வழக்கின் 7ஆவது விசாரணை கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடந்தது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி இந்த 8 பேரையும் கத்தாருக்கான இந்திய தூதர் சந்தித்து பேசினார். அவர்களை தாயகத்திற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அவர்கள் 8 பேர் மீது உளவு பார்த்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இதன் விசாரணைகள் முடிவடைந்து இந்த மாத இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் கத்தார் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கும் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த தகவல் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில் 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த 8 பேரின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர்களை விடுவிக்க தேவையான சட்ட உதவிகளை செய்வோம். கத்தார் அதிகாரிகளுடன் இந்த தீர்ப்பு குறித்து முறையிடுவோம். இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த 8 பேர் மீதும் எந்தெந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களை கத்தார் அரசு இந்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட அந்த 8 பேரின் பெயர்கள்- கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வெர்மா, கேப்டன் சவுரப் வஷிஷ்ட், கமான்டர் அமித் நாக்பால், கமான்டர் புர்னேந்து திவாரி, கமான்டர் சுகுநகர் பகாலா, கமான்டர் சஞ்சீவ் குப்தா, கடற்படை வீரர் ராகேஷ் ஆகியோர் ஆவர். இவர்கள் தோஹாவில் உள்ள சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications