"டெல்லி வாங்க.." திடீரென பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்த இந்தியா! ஆபரேஷன் சிந்தூருக்கு பின் முதல்முறை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் எந்தவொரு கூட்டத்திற்கும் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே முதல்முறையாக இப்போது அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 மே மாதம், காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக பெரிய பயங்கரவாத தாக்குதலாக இது பார்க்கப்பட்டது.

India Invites Pakistan India Pakistan

இந்தியா பாகிஸ்தான்

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா தரமான பதிலடியை கொடுத்து. அதுதான் ஆபரேஷன் சிந்தூர். இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரணடைந்தது. மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் பாகிஸ்தான் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதன் பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான ஒரு உறவே இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் முடங்கியுள்ளது. அதேபோல வான்வெளியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் நடக்கும் எந்தவொரு சர்வதேச கூட்டத்திற்கும் பாகிஸ்தானுக்கு அழைப்பு போகவில்லை.

பாகிஸ்தானுக்கு அழைப்பு

இப்படி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு முதல்முறையாக இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. நவம்பர் 20 முதல் 22ம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ள முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மன்றத்தில் பங்கேற்க, பாகிஸ்தான் அமைச்சர் அவுரங்கசீப் கான் கிச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பின்னணி

இந்த மன்றத்தில் பங்கேற்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள 10 உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் அமைச்சர் இந்த அழைப்பை ஏற்று இந்தியா வந்தால், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மூத்த பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது அதுவே முதல்முறையாக இருக்கும். இதற்கு முன்பு 2023 மே மாதம் கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி இந்தியா வந்திருந்தார். அதற்குப் பிறகு, ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இப்போது கிச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் Civilisational Dialogue Forum முதல்முறையாக நடத்தப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை கடந்த அக்டோபர் 20ம் தேதி தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் அரசு தலைவர்கள் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அனைத்து உறுப்பு நாடுகளும் அதில் பங்கேற்க அழைக்கப்படும் என அப்போதே அவர் கூறியிருந்தார். அதன்படியே பாகிஸ்தானுக்கும் இப்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் தலைவர் பதவி என்பது சுழற்சி முறையில் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும். அதன்படி இந்த கவுன்சிலுக்கு 2026-27 காலகட்டத்துக்கான சுழற்சி முறையிலான தலைமை பொறுப்பை செப்டம்பர் 1ம் தேதி பாகிஸ்தான் ஏற்று கொண்டது. கிர்கிஸ்தானிடம் இருந்து இந்த பொறுப்பை பாகிஸ்தான் பெற்றது.

இப்போது இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பெலாரஸ், சீனா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா 2017ம் ஆண்டு இந்த அமைப்பில் முழு உறுப்பினராக இணைந்தது. இப்போது ஆப்கானிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. மேலும், 15 நாடுகள் இந்த அமைப்பில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+