ரஷ்யாவை டீம் போட்டு எதிர்த்த மேற்கு உலகம்! இனி என்னவெல்லாம் நடக்கும்! ஆராய்ச்சியில் குதித்த இந்தியா
டெல்லி: ரஷ்யா மீது விதிக்கப்பட்டு இருக்கும் பொருளாதார தடைகள் காரணமாக இந்தியா எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ரஷ்யாவின் பல்வேறு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவின் நிறுவனங்கள் பொருளாதார தடையை எதிர்கொண்டு உள்ளது.
இது போக ரஷ்யாவை சர்வதேச பண பரிவர்த்தனை அமைப்பான swift மெசேஜிங் தளத்தில் இருந்தும் உலக நாடுகள் வெளியேற்றி உள்ளது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா
அதோடு ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள், தானியங்கள் விற்பனை ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதோடு ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவு எண்ணெய்களும் தடைபட்டு உள்ளது. இதனால் உலக அளவில் பல்வேறு பொருட்களின் விலை உயர தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் கூட கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் 80 பைசா வீதம் உயர்ந்து வருகிறது.

பொருளாதார தடை
இந்த விவகாரத்தில் மேற்கு உலகமே ரஷ்யாவை எதிர்த்தாலும் இந்தியா இதுவரை ரஷ்யாவை எதிர்க்கவில்லை. இந்த நிலையில்தான் ரஷ்யா மீது விதிக்கப்பட்டு இருக்கும் பொருளாதார தடைகள் காரணமாக இந்தியா எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி அளித்துள்ள பேட்டியில், போர் காரணமாக ரஷ்யா மீது பல நாடுகள் தடைகளை விதித்துள்ளது. சர்வதேச பொருளாதாரத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

பாதிப்பு
அதேபோல் சர்வதேச அளவில் சப்ளை செயின் எனப்படும் வர்த்தகம் பாதிக்கப்படும். ஏற்கனவே எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கிவிட்டன. இதை பற்றி ஆய்வு செய்து வருகிறோம். ரஷ்யா மீதான பொருளாதார தடையால் இந்தியாவிற்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆராய்ந்து வருகிறோம். இந்தியா - ரஷ்யா இடையிலான உறவில் பிற நாடுகள் தலையிட முடியாது.

உக்ரைன் போர்
இது இரண்டு நாட்டு கொள்கை ரீதியிலான உறவு. உக்ரைனில் நடக்கும் போரை உடனே முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது, என்று கூறியுள்ளார். அதாவது ரஷ்யாவின் போர் மற்றும் பொருளாதார தடையால் இந்தியா எப்படி பாதிக்கும் என்று ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதை வைத்து பல்வேறு முக்கிய முடிவுகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ரூபிள் வர்த்தகம்
முன்னதாக இந்தியா ரஷ்யாவுடன் ரூபிள் வர்த்தகத்தை மேற்கொள்ள போவதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. எண்ணெய் வர்த்தகம் தொடங்கி அனைத்திற்கும் இந்தியா ரூபாய் மூலம் பணம் செலுத்தும், அது இடைப்பட்ட மத்திய வங்கிகள் மூலம் ரூபிளாக மாற்றப்பட்டு ரஷ்யாவிடம் தரப்படும். டாலருக்கு பதிலாக இப்படி ரூபிள் வர்த்தகத்தை இந்தியா மேற்கொள்ள இருக்கிறது. இது கொஞ்சம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவிற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications