Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதலிடத்தில் "இந்தியா".. 2025 மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியீடு! பின்தங்கிய அமெரிக்கா.. லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2025ம் ஆண்டில் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு நாடுகளை சேர்ந்த மக்களிடம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் அமெரிக்கா பின்தங்கி உள்ளது. அமெரிக்கா 21வது இடத்துக்கு உள்ளது. இந்த பட்டியலில் உள்ள நாடுகளின் முழுவிபரம் வருமாறு:

ஒவ்வொரு ஆண்டும் ஹேப்பியான நாடுகளின் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் சர்வே மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது Ipsos Group என்ற நிறுவனம் புதிய சர்வேயை மேற்கொண்டது.

happiest nation india

Ipsos Group நிறுவனம் என்பது பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மார்க்கெட்டிங் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனம் சார்பில் கடந்த 2024 டிசம்பர் மாதம் 20ம் தேதி முதல் 2025 ஜனவரி மாதம் 3ம் தேதி வரை மொத்தம் 30 நாடுகளை சேர்ந்த 75 வயதுக்கு உட்பட்டவர்களிடம் சர்வே மேற்கொள்ளப்பட்டது.

இந்த சர்வேயில் மொத்தம் 23 ஆயிரத்து 765 பேர் பங்கேற்றனர். இந்த சர்வே முடிவு என்பது Ipsos Global Happiness Index 2025 என்ற பெயரில் தற்போது வெளியாகி உள்ளது. அதில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா தான் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இந்தியா 88 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அதாவது சர்வேயில் பங்கேற்றவர்களல் 51 சதவீதம் பேர் மிக மகிழ்ச்சியாகவும் (Very Happy) இருப்பதாகவும், 37 சதவீதம் பேர் ரொம்ப மகிழ்ச்சியாக (Rather Happy) இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் 8 சதவீதம் பேர் மிகவும் மகிழ்ச்சியாக இல்லை (Not Very Happy)என்றும் 4 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை (Not happy at all)என்றும் கூறியுள்ளனர்.

இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. 3வது இடத்தில் மெக்சிகோ, 4வது இடத்தில் இந்தோனேசியா, 5வது இடத்தில் பிரேசில், 6வது இடத்தில் தாய்லாந்து, 7 வது இடத்தில் நியூசிலாந்து, 8 வது இடத்தில் கொலம்பியா , 9 வது - 10வது இடத்தில் முறைகே மலேசியா அயர்லாந்து நாடுகள் உள்ளனர். 11வது இடத்தில் சிலி, 12வது இடத்தில் அர்ஜென்டினா, 13வது இடத்தில் சிங்கப்பூர் 14வது இடத்தில் ஸ்வீடன், 15வது இடத்தில் பிரான்ஸ் நாடுகள் உள்ளன.

16வது இடத்தில் பெல்ஜியம், 17 வது இடத்தில் ஸ்பெயின், 18 வது இடத்தில் போலந்து, 19 வது இடத்தில் ஆஸ்திரேலியா, 20வது இடத்தில் பிரிட்டன், 21வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. 22வது இடத்தில் கனடா, 23வது இடத்தில் தென்ஆப்பிரிக்கா, 24வது இடத்தில் இத்தாலி, 25வது இடத்தில் பெரு, 26வது இடத்தில் ஜெர்மனி 27 வது இடத்தில் ஜப்பான் 28 வது இடத்தில் தென்கொரியா, 29 வது இடத்தில் துருக்கி, 30வது இடத்தில் ஹங்கேரி நாடுகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+