ஆய்வகத்தில் உருவாக்கப்படும் அரிசி.. இனி இதுதான் சாப்பிடணுமாம்.. சுகர் பிரச்சனையே வராது
டெல்லி: இந்தியாவில் நீரிழிவு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு அரிசி சாதம் என்பது பெரும் தலைவலியாகவே இருக்கிறது. இதற்கிடையே புரதச் சத்து அதிகம் இருக்கும் செயற்கை அரிசியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். அது எந்தளவுக்குப் பயன் தரும். இதை எப்படி உருவாக்குகிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தியாவில் பொதுமக்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் பிரதான உணவுகளில் அரிசி முக்கியமானது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல கோடி பேரின் அன்றாட உணவின் அடிப்படை இதுவே. எனினும், ஊட்டச்சத்து ரீதியாக, பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு ஒரு பெரிய குறைபாடு உண்டு. இதில் பெரும்பாலும் மாவுச்சத்தே மிகுந்து காணப்படுகிறது. புரதம் அல்லது நார்ச்சத்து மிகக் குறைவாகவே உள்ளது.

அரிசி சிக்கல்
இந்த அதிக கார்போஹைட்ரேட் தன்மை காரணமாக, அரிசி பெரும்பாலும் ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்துவிடுகிறது. இதனால் நீரிழிவு நோய் அதிகரித்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் இது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அரிசி சார்ந்த உணவுகள் மூலம் போதிய கலோரிகள் கிடைத்தாலும், பலர் புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். அரிசி மூலம் பசி போனாலும் உடலுக்குத் தேவையான சத்துகள் அனைத்தும் கிடைப்பதில்லை.
இதற்கிடையே இப்போது திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR-NIIST) விஞ்ஞானிகள், ஒரே நேரத்தில் இந்த இரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணக்கூடிய புதிய முறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள் வழக்கமான அரிசியுடன் ஒப்பிடுகையில், குறிப்பிடத்தக்க அளவில் அதிக புரதச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட "டிசைனர் அரிசி" எனப்படும் புதிய வகை அரிசியை உருவாக்கியுள்ளனர்.
புரதச்சத்து குறைபாடு
அத்தியாவசிய உணவுகளின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துவது இந்தியாவுக்குத் தேவையான ஒன்றாக உள்ளது. இந்தியர்கள் நீண்ட காலமாகவே புரதச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எடுத்துக் கொள்ளும் அரிசியில் புரதச் சத்து கிடைக்க ஆரம்பித்தால் அது நிலைமையை மொத்தமாக மாற்றி அமைக்கும்!
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் தன்ராஜ் குஹா கூறுகையில், "இந்த அதிக புரதச்சத்து கொண்ட அரிசி நம்பிக்கை தருவதாகவே உள்ளது. இது சொன்னபடியே செயல்பட்டால், அரிசியைப் பிரதான உணவாகக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும். இது பசியைத் தீர்ப்பதோடு மட்டுமின்றி உடலுக்குத் தேவையான புரதத்தையும் தருகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையும் சட்டென அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது" என்றார்.
விளக்கம்
இந்தத் திட்டத்தை CSIR-NIIST இன் இயக்குநர் சி. ஆனந்தராமகிருஷ்ணன் வழிநடத்துகிறார். இந்த புதிய வகை அரிசி உருவாக்கப்பட்டதை அவர் கட்டிடக்கலையுடன் ஒப்பிடுகிறார். புதிய அரிசியை உருவாக்க, ஆராய்ச்சியாளர்கள் முதலில் வழக்கமான அரிசியில் மாவுச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற அதன் முக்கிய கூறுகளாகப் பிரித்தெடுக்கின்றனர். பின்னர், தானியத்தின் ஊட்டச்சத்துப் புரொஃபைலை மேம்படுத்தும் வகையில் அதை மீண்டும் ஒன்றிணைக்கின்றனர். எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் அரிசியில் உள்ள மாவுச்சத்தின் ஒரு பகுதியைக் குறைத்து, அதற்குப் பதிலாகக் கூடுதல் புரதம் மற்றும் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களைச் சேர்க்கின்றனர்.
எப்படி செய்கிறார்கள்
இது தொடர்பாக டாக்டர் ஆனந்தராமகிருஷ்ணன் கூறுகையில், "இது ஒரு வீட்டை மறுசீரமைப்பதைப் போன்றது. வழக்கமான அரிசி பெரும்பாலும் மாவுச்சத்தால் ஆனது. அந்த மாவுச்சத்தில் ஒரு பகுதியை நீக்கிவிட்டு, புரதத்தால் அதன் அமைப்பைப் பலப்படுத்துகிறோம். இந்த செயல்முறையில் மரபணு மாற்ற (Genetic Modification) பிராசஸ் எதுவும் செய்யப்படுவதில்லை. மாறாக, இது உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது" என்றார்.
மேலும், மில்லிங் பிராசஸின்போது சிறிய துண்டுகளாகப் போகும் "உடைந்த அரிசியை" இதில் பயன்படுத்துகிறார்கள்.. உடைந்த அரிசி பொதுவாகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இந்த புதிய முறையில், அந்த குறைந்த ரேட் அரிசியை மாவாக்கி, புரதம் மற்றும் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 போன்ற நுண்ணூட்டச்சத்துக்களுடன் கலக்கின்றனர். இவை தான் வழக்கமான அரிசியுடன் பயன்படுத்தப்படும். இப்படி இரண்டும் மிக்ஸ் ஆகி இருந்தாலும் கூட இதன் சுவை வழக்கமான அரிசி போலவே இருக்கும் என்கிறார்கள்.
எந்தளவுக்கு நன்மை
இந்த அரிசியில் குறைந்த கிளைசெமிக் குறியீடு தான் இருக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவுகளில் திடீரென உயராது. மேலும், வழக்கமான அரிசியில் பொதுவாக 6-8% புரதத்தைக் கொண்டிருக்கும் நிலையில், புதிய பதிப்பு 20%க்கு மேல் புரதத்தைக் கொண்டுள்ளது. இது இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B12 போன்ற ஊட்டச்சத்துக்களுடன் செறிவூட்டப்பட்டுள்ளன. இது ரத்த சோகை போன்ற குறைபாடுகளைக் குறைக்க உதவும். அதாவது நீரிழிவு நோயால் அவதிப்படுவோருக்கு இது மிக சிறந்த தீர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications