இன்னும் 5 நாள் தான் இருக்கு.. இந்திய ராணுவம் மொத்தமாக கிளம்பிவிடும்.. மாலத்தீவு பரபர
டெல்லி: இந்தியா மாலத்தீவு இடையே உரசல் தொடரும் நிலையில், அங்குள்ள இந்திய ராணுவம் இன்னும் 5 நாட்களில் முழுமையாக வெளியேறும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு கூட்டமான மாலத்தீவில் இந்திய ராணுவத்தினர் இருந்தனர். அங்குத் தீவுகளுக்கு இடையே நோய்வாய்ப்பட்டவர்களை அழைத்துச் செல்வதில் சிரமம் நிலவி வந்த நிலையில், அவர்களுக்கு உதவ இந்திய ராணுவம் அங்கு இருந்தது.

நோயாளிகளை எளிதாகச் சிறு தீவுகளில் இருந்து அழைத்து வர இந்தியா ஹெலிகாப்டர் ஒன்றை அளித்து இருந்தது. அந்த ஹெலிகாப்டரை ஆப்ரேட் செய்யவும் பராமரிக்கவும் இந்திய ராணுவத்தினர் அங்கு இருந்தனர்.
முய்சு: இருப்பினும், இந்திய ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முய்சு கூறினார். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் முய்சு இதைத்தான் பிரதான பிரச்சாரமாகவே முன்னெடுத்து இருந்தார். இதனால் தேர்தலில் வென்ற உடன் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், மே மாதத்திற்குள் இந்திய டீம் வெளியேறும் என முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே முதல் டீம் மாலத்தீவில் இருந்து வெளியேறிவிட்டது. அவர்களுக்குப் பதிலாக ராணுவம் சாராத தொழில்நுட்ப வல்லுநர்கள் ஹெலிகாப்டரை ஆப்ரேட் செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.
லிமிட் அவ்வளவுதான்! இந்தியர்கள் யாரும் தேவையில்லை! சீன ஒப்பந்தத்திற்கு பின் மாலத்தீவு ராணுவம் அடாவடி
ஆலோசனை: இதற்கிடையே மாலத்தீவுகளில் இருந்து இந்தியா வீரர்களை வாபஸ் பெறுவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இது தொடர்பான இருதரப்பு உயர்மட்டக் குழுவின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. வரும் மே 10ஆம் தேதிக்குள் இந்திய வீரர்கள் வாபஸ் பெற வேண்டும் என முய்சு கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இருதரப்பு ஒத்துழைப்பு தொடங்கிப் பல விவகாரங்கள் குறித்து இரு தரப்பும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வளர்ச்சி திட்டங்கள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது. மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேறுவது தொடர்பாக இதில் எந்தவொரு பாயிண்டும் இல்லை.
இன்னும் 5 நாட்கள்: அதேநேரம் மாலத்தீவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அது குறித்த தகவல்கள் உள்ளன. அதில், "இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பரஸ்பர நலன்கள் பற்றிய ஆலோசனை செய்யப்பட்டது. மே 10ஆம் தேதிக்குள் மீதமிருக்கும் இந்திய ராணுவத்தையும் திரும்பப் பெறப்படும் என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த உயர்மட்ட மையக் குழுவின் ஐந்தாவது கூட்டம் ஜூன் அல்லது ஜூலை மாதம் மாலேயில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications