லிமிட் அவ்வளவுதான்! இந்தியர்கள் யாரும் தேவையில்லை! சீன ஒப்பந்தத்திற்கு பின் மாலத்தீவு ராணுவம் அடாவடி
மாலே: மாலத்தீவுக்கு இந்தியா தந்துள்ள ஹெலிகாப்டர்கள் விவாதத்தைக் கிளப்பி இருக்கும் நிலையில், இது குறித்து மாலத்தீவு ராணுவம் சில பரபர கருத்துகளைக் கூறி இருக்கிறது.
கடந்த சில காலமாகவே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே நல்லுறவு இல்லை.. மாலத்தீவில் எப்போது சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முய்ஸு அதிபராகத் தேர்வானாரோ அப்போது முதலே அவர் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கூறி வருகிறார்.

தீவு கூட்டமான மாலத்தீவில் ஒரு தீவில் இருக்கும் நோயாளியை உடனடி சிகிச்சைக்காக மற்றொரு தீவுக்கு அழைத்துச் செல்ல உதவவே இந்திய ராணுவம் மாலத்தீவுக்கு ஹெலிகாப்டர்களை வழங்கி இருந்தது.
ஹெலிகாப்டர்கள்: அந்த ஹெலிகாப்டர்களை ஆப்ரேட் செய்யவும் அதைப் பராமரிக்கவும் இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கிறார். அதன்படி பார்க்கும் போது சுமார் 88 இந்திய ராணுவத்தினர் அங்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே மாலத்தீவு நாட்டில் உள்ள இந்தியா ஹெலிகாப்டர் குறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சில பரபர கருத்துகளைக் கூறியிருக்கிறது.
அதாவது இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை இயக்கும் அதிகாரம் தங்கள் நாட்டிற்கே இருப்பதாக மாலத்தீவு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநர் கர்னல் அகமது முஜுதாபா முகமது, "மாலத்தீவில் இருந்து இந்தியப் படைகளை முழுமையாகத் திருப்பி அனுப்புவது குறித்துத் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்.
மாலத்தீவு அதிபர்: மே 10ஆம் தேதிக்குப் பிறகு எந்த வெளிநாட்டுப் படைகளும் இங்கே இருப்பதை அனுமதிக்கப் போவதில்லை. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவின் நிலைப்பாடு இதுதான். எனவே, அது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார். மாலத்தீவுக்கு இந்தியா அனுப்பிய ஹெலிகாப்டர்களை ஆப்ரேட் செய்ய அங்கே இருக்கும் இந்திய ராணுவத்தின் பெரும் விவாதமாகவே இருந்து வருகிறது.சீனாவுடன் ஒப்பந்தம் போட்ட மறுநொடி.. "இந்தியர்கள் இருக்கக்கூடாது!" மாலத்தீவு அதிபர் மீண்டும் சர்ச்சை
இது குறித்து சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாலத்தீவில் இருக்கும் இந்தியர்கள் ராணுவத்தினருக்குப் பதிலாக இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர் குழு அந்த ஹெலிகாப்டரை இயக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதற்காகக் கடந்த வாரம் தான் இந்தியாவின் முதல் தொழில்நுட்ப வல்லுநர் டீம் மாலத்தீவுக்குச் சென்றது. இதனை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்துள்ளார்..
வல்லுநர் குழு: வரும் மே 10ஆம் தேதிக்குள் அங்குள்ள அனைத்து இந்திய ராணுவ வீரர்களும் அழைக்கப்பட்டு, அதற்குப் பதிலாகத் தொழில்நுட்ப வல்லுநர் குழு அங்கே செல்லும் என்பதே முடிவாக இருந்தது. இருப்பினும், முய்ஸு கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியது. அதாவது ராணுவ யூனிபார்மில் இருந்தாலும் சரி, வல்லுநர் குழு என்ற பெயரில் இருந்தாலும் சரி அவர்கள் அனைவருமே நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அடாவடியாக அறிவித்தார்.
இப்படி அவர் அடாவடி அறிவிப்பை வெளியிடும் கொஞ்ச நேரம் முன்பு தான் மாலத்தீவு சீனா ராணுவத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இத்திட்டத்தின்படி சீனா மாலத்தீவுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தாத ஆயுதங்களை இலவசமாக வழங்கும். குறிப்பாகக் கண்ணீர்ப்புகை மற்றும் பெப்பர் ஸ்ரே ஆகியவற்றை இலவசமாக வழங்குவதே இந்த ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் போட்ட உடன் தான் அனைத்து இந்திய ராணுவத்தையும் வெளியேற்றப் போவதாக அவர் அறிவித்து இருந்தார்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications