இன்னும் ஒரே வாரம்தான்! இந்தியா எடுக்கும் துணிச்சல் முடிவு.. குஷியில் ரஷ்யா.. ஆடிப்போன அமெரிக்கா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் பல ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்த நிலையில்தான் ரஷ்யாவுடன் மேலும் நெருக்கம் காட்ட இந்தியா முடிவு செய்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனாலும் இந்தியா கொஞ்சம் ரஷ்யா சார்புடன் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதை அமெரிக்கா விரும்பவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் பொருளாதார தடைக்கு இடையிலும் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

வர்த்தகம்

வர்த்தகம்

இந்தியாவின் இந்த முடிவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் விரும்பவில்லை. இந்தியாவின் இந்த முடிவு விதி மீறல் இல்லை. இருந்தாலும் இந்தியா வரலாற்றில் தவறான பக்கங்களில் பதிவாகிவிட கூடாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. இருந்தாலும் அது எதிர்பார்த்த நிலைப்பாடுதான் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்யாவுடன் மேலும் நெருக்கம் காட்ட இந்தியா முடிவு செய்துள்ளது.

ரஷ்யா விருப்பம்

ரஷ்யா விருப்பம்

ரஷ்யா தற்போது சர்வதேச வர்த்தக மெசேஜிங் தளமான swift தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதோடு ரஷ்யாவின் பல்வேறு வங்கிகள் தடை செய்யப்பட்டுள்ளன. ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக நாடுகளுடன் இனி டாலரில், யூரோவில் வர்த்தகம் செய்ய வேண்டாம். தங்கள் நாட்டு நாணயமான ரூபிளில் வர்த்தகம் செய்யலாம் என்ற முடிவில் ரஷ்யா இறங்கி உள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடியாக ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக புடின் தனது பேச்சில், ரஷ்யாவும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்க வேண்டும் என்றால், ரஷ்யாவிடம் நட்பாக இல்லாத எதிரி நாடுகள், ரூபிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 வேறு நாணயம் வேண்டாம்

வேறு நாணயம் வேண்டாம்

வேறு நாணயத்தை பயன்படுத்த கூடாது. எங்கள் நாட்டில் பொருட்களை வாங்கிவிட்டு, எங்கள் ரூபிளில் பணம் செலுத்தாமல் டாலர், யூரோவில் பணம் செலுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று புடின் கூறியுள்ளார். இந்த நிலையில்தான் இந்தியாவும் ரஷ்யாவுடன் ரூபிள் வர்த்தகத்தை மேற்கொள்ள போவதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. எண்ணெய் வர்த்தகம் தொடங்கி அனைத்திற்கும் இந்தியா ரூபாய் மூலம் பணம் செலுத்தும், அது இடைப்பட்ட மத்திய வங்கிகள் மூலம் ரூபிளாக மாற்றப்பட்டு ரஷ்யாவிடம் தரப்படும்.

ரஷ்யா

ரஷ்யா

அதேபோல் இந்தியாவிற்கு ரஷ்யா ரூபிளில் பணம் செலுத்தும். அது மத்திய வங்கிகள் மூலம் ரூபாயாக மாற்றப்பட்டு இந்தியாவிடம் தரப்படும். இனி இரண்டு நாட்டு வர்த்தகத்தில் டாலர் இடம்பெறாது என்று தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவையும், டாலர் மதிப்பையும் இது கடுமையாக பாதிக்கும். . ஏற்கனவே ரஷ்யாவின் அறிவிப்பால் டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு மீண்டும் 102 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவை மறைமுகமாக சீண்டும் இந்த துணிச்சலான முடிவை இந்தியா இன்னும் ஒரு வாரத்தில் எடுக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

    May 9 தான் Last Date! Russian Army-க்கு பறந்த உத்தரவு | Oneindia Tamil
    சிஎன்பிசி

    சிஎன்பிசி

    சிஎன்பிசி நிறுவனம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக சிஎன்பிசி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பேட்டியில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான ரூபாய் - ரூபிள் வர்த்தகம் அடுத்த ஒரு வாரத்தில் தொடங்கப்படலாம். இதற்கான ஆலோசனைகள் நடக்கிறது. எந்தெந்த வங்கிகள் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளும் என்பது விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சிஎன்பிசி நிறுவனம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக சிஎன்பிசி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட பேட்டியில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான ரூபாய் - ரூபிள் வர்த்தகம் அடுத்த ஒரு வாரத்தில் தொடங்கப்படலாம். இதற்கான ஆலோசனைகள் நடக்கிறது. எந்தெந்த வங்கிகள் பண பரிமாற்றத்தை மேற்கொள்ளும் என்பது விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+