INDIA - NDA.. இரண்டு கூட்டணியும் வேணாம்! "தனி ரூட் " எடுக்கும் மாயாவதி.. அவரே சொன்ன காரணத்தை பாருங்க
டெல்லி: தேர்தலுக்கு ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு போட்டியிட திட்டமிட்டுள்ளன. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக உள்பட 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்கான செயல் திட்டம், இட பங்கீடு குறித்து ஆலோசிக்க அடுத்த அடுத்த கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் இரண்டு கூட்டங்கள் முடிந்த நிலையில், அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. அதேபோல், தேசிய ஜனநாயக கட்சிகளின் கூட்டணியும் நேற்று நடைபெற்றது. தேர்தலுக்கு ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைய போவது இல்லை என்று அறிவித்துள்ளார். இது குறித்து மாயாவதி கூறியதாவது:-
வரும் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும். அதேபோல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நிபந்தனைகளுடன் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். ஆனால், இந்தக் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியிலோ அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணியிலோ இடம் பெற்றிருக்காது" என்றார்.
மேலும் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையுமே விமர்சித்த மாயாவதி, பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நோக்கம் மற்றும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே உள்ளன. குறிப்பாக தலித், பழங்குடியினர், ஏழை மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லீம் மற்றும் பிற சிறுபான்மை வகுப்பினர் விவகாரத்தில் இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் ஒரே மாதிரியாகவே உள்ளது.
இரண்டு கட்சிகளுமே போலியான வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே எந்த வேறுபாடும் இல்லை. அதிகாரத்திற்காக காங்கிரஸ் கட்சி சாதியவாத முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும் தனது என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது.
ஆனால், அவர்களின் கொள்கைகள் முஸ்லீம்களுக்கும் தலித்களுக்கும் எதிராகவே உள்ளது. இரண்டு கட்சிகளுமே ஆட்சிக்கு வந்தால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. இதன் காரணமாகவே நான் பாஜகவுடனோ காங்கிரஸ் கூட்டணியுடனோ கை கோர்க்கவில்லை" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications