கொரோனா பாதிப்பு- உலக நாடுகளில் ஈரானை பின்தள்ளி 10-வது இடத்தில் இந்தியா
டெல்லி: உலக நாடுகளில் கொரோன பாதிப்பில் ஈரானை பின்தள்ளி 10-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையால் துருக்கியையும் இந்தியா பின் தள்ள வாய்ப்புள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,97,998 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 3,46,685 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 23,01,990 பேர் குணமடைந்தும் உள்ளனர். கொரோனாவால் அமெரிக்காதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 16,86,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 99,300 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.
2-வது இடத்தில் பிரேசில் உள்ளது. கடந்த சில வாரங்களாக ரஷ்யாதான் 2-வது இடத்தில் இருந்தது. தற்போது ரஷ்யாவை பிரேசில் பின் தள்ளியது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.63,618 ஆக இருக்கிறது. பிரேசிலில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 22,716 ஆகவும் உள்ளது. 3-வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 3,44,481 ஆக இருக்கிறது. ரஷ்யாவில் 3,541 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் ஸ்பெயின் 4-வது இடத்தில் கொரோனா மரணங்களில் இங்கிலாந்து 4-வது இடத்திலும் இருக்கிறது. ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,82,852 ஆக இருக்கிறது. இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 36,793 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனா மரணங்கள் 28,752ஆக இருக்கிறது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு 2,59,559 ஆக உள்ளது.
உலக நாடுகளில் இந்தியா 11-வது இடத்தில் இருந்து வந்தது. தற்போது 10-வது இடத்தில் இருந்த ஈரானை பின் தள்ளி அந்த இடத்துக்கு இந்தியா நகர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,536 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,024 ஆக உள்ளது. ஈரானில் கொரோனா பாதிப்பு 1,35,701 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,417 ஆகவும் உள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications