Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிந்து நதி நீர் விவகாரம் தொடர்பாகப் பாகிஸ்தானை மிகக் கடுமையாக இந்தியா விமர்சித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் வரை தண்ணீர் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் முதலில் மனித உயிர்கள் குறித்து யோசிக்க வேண்டும் என்றும் சாடியுள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது அனைவருக்கும் தெரியும். இந்தியா இந்த முடிவை எடுக்கும் என்பதைப் பாகிஸ்தான் துளியும் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது முதலே தொடர்ந்து சர்வதேச அரங்குகளில் ஏதோ எந்தவொரு தவறும் செய்யாதது போலப் பாகிஸ்தான் புலம்பி வருகிறது. இப்போதும் ஐநா சபையில் அப்படி தான் இந்தியாவைக் குற்றஞ்சாட்டப் பாகிஸ்தான் முயன்றது.

India on Indus water treaty at UN Water Day Event Zero Water Zero Talks warning to Pakistan

வெளுத்து வாங்கிய இந்தியா

இதற்கிடையே ஐநா சபையில் ஓவராக பேசிய பாகிஸ்தானை இந்தியா வெளுத்து வாங்கியுள்ளது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை உறுதியாக முடிவுக்குக் கொண்டுவரும் வரை, அவர்களுடன் "ஜீரோ நீர், ஜீரோ பேச்சுவார்த்தை" என்ற கொள்கையைப் பின்பற்றப் போவதாக இந்தியா அறிவித்துள்ளது. உலக நீர் தின நிகழ்வில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரீஷ் பர்வதனேனி இந்த கருத்துகளைத் தெரிவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் தெளிவான நிலைப்பாடு மீண்டும் உலக நாடுகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னணி

கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமின் பைசரான் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 26 அப்பாவி இந்து சுற்றுலாப் பயணிகள் கொன்றனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இந்தியா அறிவித்தது. கடந்த காலங்களில் இந்தியா இப்படியொரு முடிவை எடுத்ததே இல்லா. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் பல முறை கோரிக்கை விடுத்த பிறகும், தீவிரவாதத்திற்கு ஆதரவை நிறுத்தாத வரை தண்ணீர் இல்லை என்பதில் இந்தியா மிகத் தெளிவாக இருக்கிறது.

ஐ.நா. சபையில் பர்வதனேனி மேலும் பேசுகையில், "பாகிஸ்தான் ஒப்பந்தங்களை விட மனித உயிரை மதிக்க வேண்டும்.. 65 ஆண்டுகளுக்கு முன்பு நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் நட்புடன் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால், பாகிஸ்தான் பல ஆண்டுகளாக ஒப்பந்தத்தின் நோக்கத்தை மீண்டும் மீண்டும் மீறி வருகிறது.. மூன்று போர்களைத் தொடங்கி, இந்தியர்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் தொடர்பு

பஹல்காம் தாக்குதலைப் பொறுத்தவரை அது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதக் குழுவின் தலைவர்கள் மற்றும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு பிரிவு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்பதை எங்கள் உளவுத்துறை அமைப்புகள் கண்டறிந்தது. எங்களது பொறுமையும் பெருந்தன்மையும் பாகிஸ்தானின் போக்கை மாற்றவில்லை. மீண்டும் மிகத் தெளிவாகச் சொல்கிறேன். இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய அனைத்து பயங்கரவாதத்திற்கும் பாகிஸ்தான் ஆதரவளிப்பதை முழுமையாக நிறுத்தும் வரை ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும். வேறு வழியில்லாமலேயே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

நாங்கள் சரியாகத் திட்டமிட்டே சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தினோம். இது பாகிஸ்தானுக்குக் குறிப்பிடத்தக்கப் பொருளாதார மற்றும் விவசாயத் தாக்கங்களை ஏற்படுத்தும். இது முந்தைய ராஜதந்திர அல்லது ராணுவ நடவடிக்கைகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒப்பந்தங்களின் புனிதத்தன்மை பற்றிப் பேசுவதற்கு முன், பாகிஸ்தான் மனித உயிரின் புனிதத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும். பயங்கரவாதத்தைத் தனது அரசின் கொள்கையாகப் பயன்படுத்துவதை உடனடியாக நிபந்தனையின்றி கைவிட வேண்டும்" என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+