இந்திய பகுதிகளுடன் புதிய மேப் வெளியிட்டு சீண்டிய நேபாளம்- மத்திய அரசு கடும் எதிர்ப்பு
டெல்லி: இந்திய பகுதிகளுடன் புதிய மேப் வெளியிட்டு சீண்டிய நேபாளத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
நேபாள எல்லையில் உள்ள லிபுலேக், லம்பியாதூரா, கலபாணி ஆகியவற்றை நீண்டகாலமாக அந்த நாடு உரிமை கோரி வருகிறது. அண்மையில் மத்திய அரசு இந்த பகுதிகளில் சாலை அமைத்தது.

அதற்கும் நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதே இந்த சர்ச்சை பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்தது நேபாளம்.
அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியாவையே பெரும்பகுதி சார்ந்திருக்கும் நேபாளம் திடீரென இப்படி போர்க் கொடி தூக்கியதன் பின்னணியில் சீனாவின் தூண்டுதல் இருப்பதும் சுட்டிக்காட்டபட்டது. ஏற்கனவே சிக்கிம் எல்லைகளில் இந்திய படைகளுடன் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் மோதல் போக்கை சீனா கடைபிடித்து வருகிறது.
இந்த பின்னணியில் இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், கலபாணி போன்றவற்றை தங்களது நாட்டி பகுதியாக்கி புதிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
நேபாளத்தின் இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுக்கு ஆரோக்கியமானது அல்ல எனவும் மத்திய அரசு கடுமையாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications