டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரேசிலை முந்திய இந்தியா.. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடம்.. மோசமான நிலை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இன்று ஒரே நாளில் 76,456 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா மொத்த பாதிப்பில் உலக அளவில் 2-வது இடத்துக்கு சென்றுள்ளது இந்தியா.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,69,21,520. இதில் அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 64,01,817 பேருக்கு பாதிப்பு உள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் 86,432 பேருக்கு கொரோனா; 40 லட்சத்தை தாண்டிய பாதிப்பு- 69 ஆயிரத்தை கடந்த பலிஇந்தியாவில் ஒரேநாளில் 86,432 பேருக்கு கொரோனா; 40 லட்சத்தை தாண்டிய பாதிப்பு- 69 ஆயிரத்தை கடந்த பலி

பிரேசில் 2வது இடம்

பிரேசில் 2வது இடம்

2-வது இடத்தில் பிரேசில் இருந்தது. பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,91,801. இதற்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இன்று காலையில் இந்தியா இருந்து வந்தது. அப்போது மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,23,179. பிரேசிலை ஒப்பிடுகையில் சுமார் 60,000 எண்ணிக்கையில் இந்தியா பின் தங்கி இருந்தது.

2-வது இடத்துக்கு நகர்ந்த இந்தியா

2-வது இடத்துக்கு நகர்ந்த இந்தியா

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 76,456 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,92,550 ஆக அதிகரித்தது. இதனால் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில்தான் அதிவேகம்

இந்தியாவில்தான் அதிவேகம்

பிரேசிலைப் பொறுத்தவரை 10 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க மொத்தம் 75 நாட்களானது. அமெரிக்காவில் 86 நாட்களுக்குப் பின்னர்தான் இந்த எண்ணிக்கை வந்தது. ஆனால் இந்தியாவில் 50 நாட்களிலேயே கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 13 நாட்களில் இந்தியாவில் 30 லட்சமாக இருந்த பாதிப்பு 40 லட்சமாக அதிகரித்திருக்கிறது. உலகில் மிக அதிகவேகத்தில் இந்தியாவில்தான் கொரோனா பாதிப்பு உள்ளது.

Recommended Video

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயத்தை குடிங்க.. ஆயுர்வேத டாக்டர் கவுதமன் சொன்ன சூப்பர் அட்வைஸ்
    அதிகரிக்கும் மரணங்கள்

    அதிகரிக்கும் மரணங்கள்

    இன்னொரு பக்கம் கொரோனா மரணங்களில் தற்போது இந்தியா உலக அளவில் 3-வது இடத்தில் இருக்கிறது. உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 8,78,963. இதில் அமெரிக்காவில் மட்டும் 1,92,111 பேர் இறந்துள்ளனர்.

    மெக்சிகோ- இந்தியா

    மெக்சிகோ- இந்தியா

    அடுத்ததாக பிரேசிலில் 1,25,584 பேரும் இந்தியாவில் 69,561 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 4-வது இடத்தில் மெக்சிகோ உள்ளது. மெக்சிகோவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 66,851. மெக்சிகோவில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளில் அந்த நாடு 3-வது இடத்துக்கு நகரும் நிலை உள்ளது.

    English summary
    India’s coronavirus cases crossed the 40 lakh mark: It is rapidly closing with Brazil to become the 2nd Coronavirus worst hit nation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X