இனி தாங்க முடியாது..தாக்குதலை நிறுத்துங்க! முதல்ல போனை போட்டதே பாகிஸ்தான் தான்! போட்டுடைத்த டிஜிஎம்ஓ
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் போரை நிறுத்த வேண்டுமென அவசர கோரிக்கை விடுத்தது பாகிஸ்தான் தான் எனவும் பாகிஸ்தான் கோரிக்கைக்கு பிறகு தான் இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டது எனவும் இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான லெப்டினெண்ட் ஜெனரல் ராஜிவ் கய் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் சண்டை நிறுத்த உடன்பாட்டுக்கு பிறகும் பாகிஸ்தான் பல இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவ தளபதிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானின் தீவிரவாத தளங்கள் மட்டும் அல்லாது விமானப் படைத் தளங்களும் தாக்கப்பட்டதாக இந்தியா கூறியது.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான லெப்டினெண்ட் ஜெனரல் ராஜீவ் கய், ஏர் மார்செல் ஏகே பாரதி, வைஸ் அட்மிரல் ஏஎன் புரோமோத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான மேஜர் ஜெனரல் ராஜீவ் கய்," பொதுமக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தாமல் பாகிஸ்தானின் 9 பயங்கர முகாம்கள் அளிக்கப்பட்டன. இந்திய ராணுவ நிலைகளை குறித்து பாகிஸ்தான் நடத்திய அனைத்து தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன. போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தான் படைகள் தாக்குதலை தீவிர படுத்தின. பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ தளங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
இந்தியா நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மரணம் அடைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்திருக்கின்றனர். பாகிஸ்தானின் f 16 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சர்வோத விமானத்தளம் வெற்றிகரமாக தாக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தானின் 40 ராணுவ வீரர்கள் அதிகாரிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.
#WATCH | Delhi | DGMO Lieutenant General Rajiv Ghai says "...My communication with the Pak DGMO was conducted at 15:35 hrs yesterday and resulted in cessation of cross-border firing and air intrusions by either side with effect from 17:00 hrs, 10th of May, after he proposed that… pic.twitter.com/2aIZJ3E9Xk
— ANI (@ANI) May 11, 2025
இந்தியா பதில் தாக்குதல் தொடுக்கப்பட்ட நிலையில் போரை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் அவசர கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தானின் கோரிக்கைக்கு பிறகு தான் இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டது. அதே நேரத்தில் சண்டை நிறுத்த உடன்பாட்டுக்குப் பிறகும் பாகிஸ்தான் பல இடங்களில் அத்துமீறி ட்ரோன் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது. மேலும் வரும் காலங்களில் பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ள ராணுவ தளபதிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
நேற்று மாலை 15:35 மணிக்கு பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான மேஜர் ஜெனரல் என்னை தொடர்பு கொண்டு பேசினார். மே 12-ம் தேதி மேலும் பேசுவோம் என்று அவர் முன்மொழிந்த பிறகு தான், மே 10-ம் தேதி மாலை 17:00 மணி முதல் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழி ஊடுருவல் நிறுத்தப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இந்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்தியது. இன்றிரவு அல்லது அதற்குப் பிறகு மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் ஏதாவது செய்தால் கடுமையாக பதிலளிப்பது எங்கள் உறுதியான எண்ணம்... பாகிஸ்தான் ஏதேனும் அத்துமீறினால் அதனை எதிர்கொள்வதற்கான முழு அதிகாரத்தையும் ராணுவத் தளபதி எங்களுக்கு வழங்கியுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications