Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா- பாகிஸ்தானிடம் சம அளவு அணு ஆயுதங்கள்.. சீனாவிடம் இருப்பு ரொம்பவே அதிகம்! எவ்வளவு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக நாடுகளிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் இந்தியாவும் பாகிஸ்தானும் கிட்டதட்ட சம அளவிலேயே அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் மிக மோசமான பாதிப்புகளை அணு ஆயுதங்கள் ஏற்படுத்தக் கூடியது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் போடப்பட்ட அணுக்குண்டுகளால் ஜப்பான் பல ஆண்டுகள் பாதிப்புகளை எதிர்கொண்டன.

 India, Pakistan neck and neck in nukes but still far behind China

இதனால் அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் இப்போது பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது.

அணு ஆயுதங்கள்: இதற்கிடையே இந்த நாடுகளிடம் உள்ள அணு ஆயுதங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. இந்தியாவிடம் இப்போது 164 அணு ஆயுதங்கள் இருக்கிறது. பாகிஸ்தானிடமும் கிட்டதட்ட இதே அளவில் அணு ஆயுதங்கள் உள்ளன. அதேநேரம் சீனாவுடன் ஒப்பிடும் போது, இது மிகக் குறைவாகும்.

ஜனவரி 2023 நிலவரப்படி, இந்தியாவில் 164 அணு ஆயுதங்கள் உள்ளது. இது முந்தைய ஆண்டில் இருந்த 160 அணு ஆயுதங்களை விடச் சற்று அதிகம். விமானம், நிலம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவும் ஏவுகணைகள் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இந்த அணு ஆயுதங்களை வைத்துத் தாக்குதல் நடத்த முடியும்.

மறுபுறம், பாகிஸ்தானிடம் 2022இல் 165 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில், இப்போது அது 170ஆக அதிகரித்துள்ளது. சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் குறைவாகவே உள்ளது. அமெரிக்கா, மற்றும் ரஷ்யாவுக்கு இணையாக அணு ஆயுதங்களை அதிகரிக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளதாகவே தெரிகிறது.

சீனாவிடம் எவ்வளவு: கடந்த ஆண்டு சீனாவிடம் 350 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில், இப்போது 410ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இணையாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைச் சீனாவும் வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவது போலவே தெரிகிறது. இரு நாடுகளும் 2022 புதிய வகையான அணுசக்தி அமைப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன.

 India, Pakistan neck and neck in nukes but still far behind China

இந்தியா நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகத் தெரிகிறது. இந்தியாவின் ஆயுதக் கிரேடு புளூட்டோனியத்தின் இருப்பு, பொதுவெளியில் கிடைத்த தகவல்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடனான தனிப்பட்ட உரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அதேநேரம் பாகிஸ்தான் நாட்டின் மதிப்பில் எந்தவொரு உறுதியான தகவலும் இல்லை.

இந்தியா கொள்கை: இந்தியா 1999 ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தக்கூடாது என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. அதேநேரம் அணு ஆயுதங்கள் அல்லாத பேரழிவு ஆயுதங்களின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கவும் இந்தியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். மேலும், இந்தியாவிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் அனைத்தும் தயார் நிலையிலேயே இருக்கிறது.

சர்வதேச அளவில் பார்க்கும் போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் தான் அதிகப்படியாக அணு ஆயுதங்கள் உள்ளன. உலகளவில் உள்ள அணு ஆயுதங்களில் 90% இந்த இரு நாடுகளிடம் மட்டுமே இருக்கிறது. அமெரிக்காவிடம் இப்போது 3708 அணு ஆயுதங்கள் உள்ளன. அதேபோல ரஷ்யாவிடம் இப்போது 4489 அணு ஆயுதங்கள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+