அடித்து ஆடும் இந்தியா.. அஜித் தோவலுடன், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு? பரபரப்பு தகவல்
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அசீம் முனீர் ஆகியோர் தொடர்பில் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இரவில் இருந்து இப்போது வரை இருநாடுகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவில் பாகிஸ்தான் நம் நாட்டில் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதலுக்கு முயன்றது. இதனை நம் நாடு முறியடித்தது.

அதன்பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நுர்கான், ஷார்காட்டில் உள்ள ரஃபிக்கி விமான தளம் மற்றும் சாக்வால் பகுதியில் உள்ள முரித் விமான தளங்கள் மீது நம் நாடு அதிரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
காஷ்மீர் உள்பட நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கி வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போய் உள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பல்வேறு முக்கிய நாடுகளுடன் தொடர்பில் உள்ளார். அதன்படி அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தொடர்பில் உள்ளார். அவ்வப்போது இருநாடுகளின் மோதல், முறியடிக்கப்படும் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி மற்றும் நம் நாட்டின் பதிலடி தாக்குதல்கள் விபரங்கள் பற்றிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறார்.
அதன்படி சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் இ, ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செர்காய் சோகு, பிரிட்டனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோனதன் பவெல், சவூதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முசாத் அல் அய்பான், ஐக்கிய அரபு எமிரேஸ்ட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தவ்னுன் பின் ஜயாத் அல் நக்யான், ஜப்பான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மசதகா ஒகானோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் தூதரக விவகார பிரிவு ஆலோசகர் இமானுவேல் போனி உள்ளிட்டோருடன் அஜித் தோவல் தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தன் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், ஐஎஸ்ஐ எனும் உளவு அமைப்பின் தலைவராகவும் உள்ள ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அசீம் மாலிக் ஆகியோர் தொடர்பில் உள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது கடந்த வியாழக்கிழமை இரவில் நம் நாட்டின் மீது பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்த முயற்சி முறியடிக்கப்பட்டதோடு, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை குறிவைத்து நம் நாட்டின் ஏவுகணைகள் தாக்கியது. இருநாடுகள் இடையே பதற்றம் அதிகமானதை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா நம் நாட்டின் வெளியுறவுத்துறை ஜெய்சங்கரிடம் பேசினார். அதேபோல் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தாரிடமும் பேசினார். உடனடியாக மோதலை நிறுத்தும்படி அவர் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அசீம் மாலிக் ஆகியோர் தொடர்பில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது இருநாடுகள் இடையே நெருக்கடி மற்றும் பதற்றமான சூழல் இருப்பினும் கூட டிப்ளமேட் ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் இது அமைந்துள்ளது. இதுபற்றி தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொடர்பில் இருக்கின்றனர். இதற்கு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் என்பது பொருளல்ல'' என்றார்.
அதாவது அஜித் தோவல் மற்றும் அசீம் மாலிக் ஆகியோர் Touch-ல் இருந்தாலும் கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்பதை தான் அந்த தூதரக அதிகாரி வெளிப்படுத்தி உள்ளார். முன்னதாக அஜித் தோவல் அளித்த பேட்டியில், ‛‛பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தான் கடந்த புதன் கிழமை பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தோம். நாங்கள் பாகிஸ்தானுடன் பதற்றத்தை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாகிஸ்தான் எங்களை தாக்கினால் திரும்ப பதிலடி கொடுப்போம்'' என்று வார்னிங் செய்தார். அதன்படி இன்றும் இருநாடுகள் இடையே அதிகாலை முதல் சண்டை நடந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications