இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே அணு ஆயுத போர் மூண்டால் எந்த பகுதிகள் பாதிக்கப்படும்? தெரிஞ்சுக்கோங்க
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. எனவே போர் மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். அப்படி நடந்தால், இரு நாடுகளின் முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
குறிப்பாக இரு நாடுகளின் நிர்வாக தலைநகரங்கள் கடுமையாக பாதிப்படையும். இந்த பாதிப்புகள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த செய்தி விளக்குகிறது.

இரு நாடுகளின் அணு ஆயுத விவரங்கள்:
இந்தியாவிடம் இப்போதைக்கு 160-170 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக அணு ஆயுத தாக்குதலில் ஒரு விஷயம் முக்கியமாக கவனிக்கப்படும். அதாவது முதலில் நாம் தாக்குதல் நடத்துகிறோம் எனில், எதிரி நாடு அந்த தாக்குதலில் முழுமையாக பாதிக்கப்படுமா? அல்லது மீண்டு வந்து தாக்குதல் நடத்துமா? என்பது மிக முக்கியம். அந்த வகையில் இந்தியா மீது முதலில் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், இந்தியா மொத்தமாக பாதிக்கப்பட்டுவிடாது.
மீண்டும் பதிலடியாக சக்தி வாய்ந்த தாக்குதலை திருப்பி கொடுக்கும். எனவே, பாகிஸ்தான் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். அந்த அளவுக்கு இந்தியாவின் அணு ஆயுத திறன் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. அணு ஆயுதங்களை சுமந்து செல்ல தேவையான ஏவுகணைகள் நம்மிடம் இருக்கின்றன. குறிப்பாக அக்னி வகை ஏவுகணைகள் குறைந்தபட்சம் 700 கி.மீ முதல் அதிகபட்சமாக 5000 கி.மீ வரை தாக்கக்கூடியதாகும். எனவே கன்னியாகுமரியில் இருந்து இந்த ஏவுகணையை அனுப்பினாலும் அது பாகிஸ்தானை துல்லியமாக தாக்கும்.
அதேபோல பிரித்வி எனும் மற்றொரு வகை ஏவுகணைகளும் நம்மிடம் இருக்கின்றன. இவை குறைந்த தூர இலக்குகளை தாக்கும். இது தவிர நீர்மூழ்கி கப்பலிலிருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் K-15, K-4 வகையான ஏவுகணைகளும் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா 'No First Use' எனும் கொள்கையை பின்பற்றி வருகிறது. அதாவது ஆயுதங்களை நாங்கள் முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பதுதான் இந்த கொள்கை.
இதே பாகிஸ்தான் வசம், 165-170 எண்ணிக்கை வரை அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ஷாஹீன், கவுரி மற்றும் நாசர் என்கிற பெயரில் பாகிஸ்தான் சக்திவாய்ந்த ஏவுகணைகளை வைத்திருக்கிறது. இவை சக்தி வாய்ந்தவையாக இருந்தாலும் இவற்றால் நீண்ட தூரத்திற்கு போக முடியாது. குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூரத்தில் மட்டுமே இந்த ஏவுகணைகள் பயணிக்கும். எல்லாம் ஓகேதான் ஆனால், பாகிஸ்தான் 'நாங்கள் முதலில் தாக்க மாட்டோம்' என்கிற கொள்கையை பின்பற்றவில்லை. அதிற்கு பதிலாக 'தேவைக்கேற்ப பயன்படுத்துவோம்' என்கிற கொள்கையை பின்பற்றி வருகிறது.
இரு நாடுகள் அணு ஆயுத போரில் ஈடுபட்டால் இந்தியாவில் டெல்லி, மும்பை, புனே, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் தாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. காரணம் டெல்லி இந்தியாவின் தலைநகர். இங்குதான் எல்லாமே இருக்கிறது. அப்படி இருக்கையில் இதை தாக்குவது என்பது இந்தியாவுக்கு கவுரவ பிரச்சனை. மற்றபடி மும்பை, புனே, பெங்களூர் என்பது பொருளாதார முக்கிய நகரம். சென்னை ஹைதராபாத் என்பது தென் இந்தியாவின் முக்கிய நகரங்கள்.
பாகிஸ்தானை பொறுத்தவரை, இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், பேஷாவர் போன்ற நகரங்கள் தாக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் இஸ்லாமாபாத் என்பது தலைநகரமாகும். மற்ற நகரங்களும் முக்கியமானவை. எப்படி இருப்பினும் அணு ஆயுத தாக்குதல் ஒரு குறிப்பிட்ட நகரத்தின் மீது நடத்தப்பட்டாலும், அது காற்றில் பக்கத்து நகரங்களுக்கும் பரவும். எனவே அணு ஆயுதம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications