இதுதான் எங்களால் முடியும்.. கட் அன்ட் ரைட்டாக சொன்ன இந்தியா! வரி விஷயத்தில் அமெரிக்காவுக்கு செக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பரஸ்பர வரி மற்றும் ரஷ்ய எண்ணெய்யை வாங்குகிறோம் என்று சொல்லி, இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரியை விதித்திருந்தது. வரி காரணமாக திருப்பூர் தொடங்கி நாடு முழுவதும் நகரங்களில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், வரி விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர, இந்தியா பேச்சுவார்த்தையில் இறங்கியது. தற்போது இந்தியா தரப்பில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து அறிக்கை அமெரிக்காவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி இதில் முடிவெடுக்க வேண்டியது அமெரிக்காதான்.

அமெரிக்காவுக்கு, இந்தியா இறுதி திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அதில், பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆப்பிள் மற்றும் தொழில்துறை பொருட்கள் ஆகியவற்றின் இறக்குமதி மீதான வரிகளை நீக்க இந்தியா முன் வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இருப்பினும் இந்த சலுகைகள் அமெரிக்கா தரப்பிலிருந்தும் வழங்கப்பட்டால் மட்டுமே சாத்தியம் ஆகும்.

India US trade

ஏற்கனவே இந்தியாவுக்கு 25% விதிக்கப்பட்டு இருந்த வரியை விட, தற்போது கூடுதலாக 25% விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த கூடுதல் வரியை நீக்குவதில்தான் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. 50% வகையை இந்தியாவில் நிச்சயமாக தாங்க முடியாது. ஆனால் 25% வரியை சமாளித்து விடலாம். எனவேதான் இறக்குமதி மீதான வரிகளை நீக்க இந்தியா முன் வந்திருக்கிறது.

இந்தியா எடுத்த முடிவுக்கு ரிசல்ட் தெரிய தொடங்கியிருக்கிறது. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜாமிசன் கிரீர், இந்தியாவிடம் இருந்து நாங்கள் பெற்றதிலேயே இதுதான் மிகச் சிறந்த சலுகை என்று கூறியிருக்கிறார். தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை குழுக்கள் தங்கள் வேலையை முடித்து விட்டதாகவும், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்கிற முடிவை அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் எடுக்க வேண்டும் என்றும், அந்நாட்டு வர்த்தக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளார்கள்.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை காரணம் காட்டிதான், இந்தியா மீது கூடுதலாக 25% வரியை அமெரிக்கா விதித்திருக்கிறது. எனவே இந்தியா எனது ரஷ்ய என்ன இருக்கும் அதை குறைத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்ய என்னை இறக்குமதி 31% அளவில் குறைந்திருக்கிறது. இதை காட்டி அமெரிக்காவுடன் பேரம் பேச முடியும்.

எல்லா விஷயத்திலும் தற்போது இந்தியா தனது தரப்பை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறது. இனி முடிவெடுக்க வேண்டியது அமெரிக்காதான். சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். அவரது வருவை அமெரிக்காவுக்கு ஸ்டராங்கான மெசேஜை கொடுத்திருக்கிறது. ஒருவேளை அமெரிக்கா வரியை குறைக்கவில்லை எனில், மீண்டும் ரஷ்யாவுடன் இந்தியா கை கோர்க்கும். இது அமெரிக்காவுக்கு சிக்கல். எனவே என்ன முடிவெடுப்பது? என அமெரிக்கா யோசித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+