இந்தியாவில் 24 மணிநேரத்தில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 4,092 பேர் மரணம்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டியதாக ஒருநாள் கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது சற்று குறைய தொடங்கி இருக்கிறது. ஒரே நாளில் 4,092 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். இந்தியாவில் ஒருநாள் கொரோனா 3 லட்சத்தை தாண்டியதாக இருந்து வந்தது. அதே நேரத்தில் இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் 4,092 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,37,01,233 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 33,92,802 ஆகும். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14,21,53,449.
கொரோனா மொத்த பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் ஒருநாள் பாதிப்பில் உலகில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டியதாக இருந்து வந்தது.

2.81 லட்சம் பேருக்கு பாதிப்பு
இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,81,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,49,64,925. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,11,67,609.

அதிகமாகும் மரணங்கள்
ஆனால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4,092 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொர்ரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,74,411. இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 35,22,905.

மகா., தமிழகத்தில் அதிகம்
மாநிலங்களில் மகாராஷ்டிராவில் நேற்று 34,389, தமிழகத்தில் 33,181 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. கர்நாடகாவில் 31,531, கேரளாவில் 29,704 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

மகாராஷ்டிராவில் மரணங்கள்
மகாராஷ்டிராவில்தான் அதிக அளவிலான கொரோனா மரணங்கள் தொடருகின்றன. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 974 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கர்நாடகாவில் 403, தமிழகத்தில் 311, உத்தரப்பிரதேசத்தில் 308, டெல்லியில் 262 பேர் கொரோனாவால் நேற்று மரணம் அடைந்தனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications