195 நாட்களுக்கு பின் இந்தியாவில் கிடுகிடு அதிகரிப்பு! ஒரே நாளில் 5335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
டெல்லி: இந்திாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25,000-த்தை தாண்டியது. ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 5,000-த்தை தாண்டி பதிவாகி உள்ளது.
உலக நாடுகளில் ஒருநாள் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 684,384,456. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 657,374,078. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,834,780. உலக நாடுகளில் ஒருநாள் பாதிப்பு 68,452 ஆக பதிவாகி இருந்தது.

உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு நிலவரம்: தென்கொரியா 14,465 ; பிரான்ஸ் 9,922; ஜப்பான் 9,500; ரஷ்யா 8,636; அமெரிக்கா 8,280. உலக நாடுகளில் நேற்று மட்டும் கொரோனாவால் 371 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,335. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 13. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் கேஸ்கள் எண்ணிக்கை 25,587.
கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா 2 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தனர். முந்தைய 7 கொரோனா மரணங்களை கேரளா தற்போது சேர்த்துள்ளது.
நமது நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,47,39,054. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் 4,41,82,538. இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் 5,30,929. இந்தியாவில் மொத்தம் 220.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பானது 195 நாட்களுக்கு பிறகு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,383 ஆக பதிவாகி இருந்தது.
உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700ஐ தாண்டியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 569 பேருப்பு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கொரோனாவால் நேற்று மகாராஷ்டிராவில் மரணம் அடைந்தனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 3874 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். மும்பையில் மட்டும் 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. டெல்லியில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1795.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான சுகாதாரத்துறை அமைச்சக அறிவிக்கை: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,993 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 25,587 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.06 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.75 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,826 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,82,538 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.32% வாராந்திர பாதிப்பு விகிதம் 2.89%. இதுவரை மொத்தம் 92.23 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,60,742 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications