இந்தியாவில் 203 நாட்களுக்கு பின் விஸ்வரூபம்: ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,050; ஆக்டிவ் கேஸ்கள் 28,303
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28,000-த்தை தாண்டியது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,000-த்தை தாண்டி பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,050. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் கேஸ்கள் எண்ணிக்கை 28,303.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 684,587,868; உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் 6,836,268; உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 657,486,112.
உலக நாடுகள் முழுவதும் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,515. தென்கொரியாவில் அதிகபட்சமாக 12,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பிரன்ஸ் 9374; ரஷ்யா 9371; ஜப்பான் 8562; அமெரிக்கா 7183 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. உலக நாடுகளில் நேற்று மட்டும் 420 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,050 ஆக பதிவாகி உள்ளது. கடந்த 203 நாட்களுக்குப் பின்னர் கொரோனா பாதிப்பு 6,000-த்தை கடந்து பதிவாகி உள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 3 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 2 பேரும் டெல்லி, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 28,303 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பு நிலவர அறிக்கை: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 2,334 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 28,303 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.06 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.75 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,85,858 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 3.39% வாராந்திர பாதிப்பு விகிதம் 3.02% இதுவரை மொத்தம் 92.25 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,78,533 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
-
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர்












Click it and Unblock the Notifications