இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியது- ஒருநாள் கொரோனா தொற்று 2151 ஆக அதிகரிப்பு!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியது. இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,151 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து கொண்டே இருக்கிறது.

கடந்த திங்கள்கிழமையன்று 24 மணிநேரத்திலான கொரோனா பாதிப்பு, 1805 ஆக பதிவாகி இருந்தது. நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1573 ஆக பதிவாகி இருந்தது.
இந்நிலையில் இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,151 ஆக பதிவாகி உள்ளது. கடந்த 5 மாதங்களுக்குப் பின் மிக அதிகமான ஒருநாள் கொரோனா பாதிப்பு இது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையும் 11,000-த்தை தாண்டியுள்ளது.
நாட்டின் கொரோனா நிலவரம்:
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 11,336 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது 11,903 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.03 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.78 சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,222 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,66,925 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 2,151 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.51% வாராந்திர பாதிப்பு விகிதம் 1.53%. இதுவரை மொத்தம் 92.13 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,42,497 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications