பெயரை மாற்றுவதால் உண்மை மாறுமா? அருணாச்சல பிரதேச விவகாரத்தில் அத்துமீறும் சீனா.. மத்திய அரசு பதிலடி
டெல்லி: இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள அருணாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மறுபெயரிட்டு சீனா அத்துமீறியிருக்கிறது. இதற்கிடையே சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெறுமன மறுபெயரிடுவதால் எதுவும் மாறப்போவதில்லை என்றும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே எப்போதும் இருக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம். இது சீனா உடன் எல்லையைப் பகிர்ந்து வருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது எனச் சொல்லி சீனா பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது. இருப்பினும், மத்திய அரசு அதற்குத் தக்கப் பதிலடிகளையும் கொடுக்கும்.

சீனா
அப்படித்தான் சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களின் பெயர்களைச் சீன மொழியில் மறுபெயரிடுவதாகச் சீனா அறிவிக்க முயன்றது. இருப்பினும், அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள மத்திய அரசு, பெயரை மாற்றுவதால் மட்டுமே அவை இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் போய்விடாது எனக் காட்டமாக மறுத்துள்ளது.
வெளியுறவுத்துறை அறிக்கை
இந்த விவகாரத்தில் சீனாவை மிகக் கடுமையாக விமர்சித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட்டு, சீனா தொடர்ந்து வீணான மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் கவனித்துள்ளோம்.
இந்தியாவின் கொள்கையைச் சீனா ஏற்க வேண்டும்.. சீனாவின் இதுபோன்ற முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது.. இப்போதும் இருக்கிறது.. இனியும் அப்படியே இருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை. அதைச் சும்மா மறுபெயரிடுவதால் மாற்ற முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறை இல்லை
அருணாச்சலப் பிரதேசத்தின் பகுதிகளின் பெயர்களைச் சீனா மாற்றுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2024 ஏப்ரல் மாதம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே உள்ள 30 இடங்களுக்கு மறுபெயரிடுவதாகச் சீனா நான்காவது பட்டியலை வெளியிட்டது.
அருணாச்சலப் பிரதேசத்தில் தரப்படுத்தப்பட்ட புவியியல் பெயர்கள் என்று அழைக்கப்படும் பட்டியலைச் சீனா வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஒரு பகுதியான அருணாச்சலப் பிரதேசம் சீனாவுக்குச் சொந்தமானது என்றும் அதன் பெயரை சாங்னான் என்றும் குறிப்பிட்டு சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
40 இடங்கள்
அந்தப் பகுதியில் உள்ள 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை, 11 குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஒரு நிலப்பகுதி ஆகியவற்றுக்குச் சீனா மறுபெயரிடுவதாக அறிவித்திருந்தது. இது மட்டுமின்றி சீன அமைச்சகம் மேப் சாட்டிலைட் படங்களையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல பிரதேச விவகாரம்
அருணாச்சலப் பிரதேசம் தொடர்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இது சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியான திபெத் பகுதியுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது. 1960கள் முதலே அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் சீனா தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறது.
குறிப்பாகக் கடந்த 2017ல் ஆறு இடங்களுக்கான பெயர்களை மாற்றி சீனா ஒரு அறிக்கையை வெளியிட்டது.. அதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் 15 இடங்களின் பெயர்களை மறுபெயரிடுவதாகச் சொல்லி சீனா இன்னொரு அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து 2023ஆம் ஆண்டில் 11 இடங்களுக்கு மீண்டும் மறுபெயரிடுவதாக அறிவித்து சீனா இன்னொரு பட்டியலை வெளியிட்டது. அதேநேரம் ஒவ்வொரு முறையும் சீனா இதுபோல மறுபெயரிடும்போது இந்தியா அதற்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications