இந்தியாவில் ஊரடங்கு? "அப்படியொரு திட்டம் பரிசீலனையில் கூட இல்லை!" மத்திய அரசு திட்டவட்டம்
டெல்லி: மத்திய கிழக்கில் 4வது வாரமாகப் போர் தொடர்கிறது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா போன்ற லாக்டவுன் போடப்படலாம் எனத் தகவல் பரவிய சூழலில், அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஊரடங்கை அமல்படுத்தும் எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 4வது வாரமாகத் தொடர்கிறது. அடுத்த 10 நாட்களுக்குத் தாக்குதலை நிறுத்த போவதாக அமெரிக்கா சொல்லியுள்ளது. இருப்பினும், இஸ்ரேல் தரப்பு இதுவரை எதுவும் சொல்லவில்லை.

அதேநேரம் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. விநியோக சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க லாக்டவுன் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சம் எழுந்தது.
சமூக வலைத்தளங்களில் ஊரடங்கு குறித்த தகவல்கள் பரவின. இதற்கிடையே மத்திய அரசு இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. ஊரடங்கை அமல்படுத்தும் எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
ஈரான் போர் சூழல் காரணமாக ஊரடங்கு எனப் பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications