புலி பதுங்குனது பாய தான்.. குருவி போல் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள்.. ராணுவம் வெளியிட்ட வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை, கப்பற்படை, தரைப்படை ஆகியவை இணைந்து தாக்கின. தொடர்ந்து பாகிஸ்தானின் ஏவுகணைகளும் இந்தியாவை நோக்கி வந்த நிலையில் அவை தாக்கி அழிக்கப்பட்டன. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானின் சதித் திட்டத்தை முறியடித்த வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 25 இந்தியர்கள் உட்பட 26 பேர் பலியாகினர். தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தொடர்புடைய தீவிரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

தொடர்ந்து இரு நாடுகள் இடையே போர் ஏற்படும் சூழல் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்டன.

India Operation Sindoor Pakistan

குறிப்பாக ஜெய்ஸ் இ முகமத், லஸ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மேலும், இந்தியா தேடிவரும் பயங்கரவாதி என மசூத் அசாரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட தீவிரவாதிகளும் அழித்தொழிக்கப்பட்டனர். இதை அடுத்து இந்தியாவின் நடவடிக்கை போர் என கூறிய பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இருந்த போதும் இந்தியாவின் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்தியா அவற்றை தாக்கி அழித்தது. மேலும் விமானப்படை, கப்பற்படை, தரைப்படை ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தின. இதில் இஸ்லாமாபாத் கராச்சி ஆகிய பகுதிகள் தாக்கப்பட்டதோடு f 16 விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த விமானப் படைத் தளங்களும் அழிக்கப்பட்டன. இது குறித்து பாகிஸ்தான் கருத்து எதுவும் சொல்லாத நிலையில் பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாகவும் விமானப்படை தளங்கள் உள்ளிட்டவை தாக்கி அழிக்கப்பட்டதாக இந்தியாவின் முப்படை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவமும் பொய் செய்திகளை வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் தான் தற்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. மிக அமைதியாக இருந்து எதிரிகளின் பகுதிகளை தாக்கி அழித்த வீடியோ காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும் எப்போதும் தாக்குதலுக்கு தயார் எனவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய எல்லைப் பகுதிகளை நெருங்கிய போது எஸ் 400 கண்காணிப்பு அமைப்பு கண்டுபிடித்தது. தொடர்ந்து அவை தாக்கி அழிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து ட்ரோன்கள் ஏவப்பட்டது. மேலும் நடுவானில் பறந்து கொண்டிருந்த ட்ரோன்கள் ஏவுகணைகள் தாக்கப்பட்டது. அவற்றின் எச்சங்கள் ஆகியவை இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. வீடியோவின் இறுதியில் அடுத்து வரும் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார், பதிலடி கொடுக்க தயார் என அந்த வீடியோ முடிந்துள்ளது.

இதன் மூலம் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்கு இந்த வீடியோ ஆதாரமாக அமைந்துள்ளது. மேலும் எந்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் அதனை சமாளிக்க இந்தியா தயாராக இருப்பது இந்த வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர் பாதுகாப்பு துறை வல்லுனர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+