இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,919 பேருக்கு கொரோனா பாதிப்பு- 470 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,919 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் ஒரே நாளில் 470 பேர் மரணமடைந்தனர்.
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பரவல் இருந்து வருகிறது. அந்தந்த மாநிலங்கள் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு, மரணம், டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிடுகிறது.

இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை விரிவாக வெளியிடுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,44,78,517 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 1,28,762 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இந்தியாவில் 470 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4,64,623 பேராகும்.
இதுவரை இந்தியாவில் மொத்தம் 1,14,46,32,851 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 73,44,739 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டன. ஒரே நாளில் 11,242 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 3,38,85,132 ஆகும். அதாவது டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 98.28 சதவீதமாகும் உயிரிழப்பு விகிதம் 1.35 சதவீதமாகவும் உள்ளது. மொத்த தினசரி பாசிட்டிவிட்டி கேஸ்களின் எண்ணிக்கை 0.97 சதவீதமாக உள்ளது. வாராந்திர பாசிட்டிவிட்டி ரேட்டின் எண்ணிக்கை 0.94 சதவீதமாகும்.
தமிழகத்தில் 6,29,64,271 டோஸ் தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளன. இந்த மாதத்திற்குள் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் போடுவதற்கு தமிழக சுகாதாரத் துறை முனைப்பு காட்சி வருகிறது. தமிழகத்தில் 782 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் ஒரே நாளில் 907 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 782 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,17,203 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications